மேலும் அறிய
Healthy Breakfast: ஆரோக்கியமான காலை உணவில் என்னெல்லாம் இருகக் வேண்டும்? இதைப் படிங்க!
Healthy Breakfast: காலை உணவில் எந்த உணவுகளையெல்லாம் சாப்பிட கூடாது என்பது பற்றி மருத்துவர்கள் தெரிவிப்பதை காணலாம்.

உணவு
1/7

காலை உணவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் உள்ளிட்டவைகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த, அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட, துரித உணவு போன்றவற்றை காலை உணவாக சாப்பிட கூடாது. பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிட கூடாது.
2/7

எண்ணெயில் பொரித்த அதிக எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது. அதோடு, பிரெட் பதப்படுத்தப்பட்ட உணவு. ஸ்நாக்ஸ் நேரத்தில் எப்போதாவது இதை சாப்பிடலாம். ஆனால், காலை உணவிற்கு சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லை.
3/7

காலை உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இறைச்சி ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் பதப்படுத்தப்படுவது ஆரோக்கியமற்றது. பல்வேறு உடல்நிலை பாதிகப்புகளுக்கு வழிவகுக்கும். ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்களுக்கு வைத்த இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுன்ம்.
4/7

இட்லி, தோசை உடன் சாம்பார், சட்னி, கோதுமை ரவை உப்புமா, சிறுதானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளுடன் பழங்கள், நட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
5/7

வேக வைத்த முட்டை, ஆம்லெட் சாப்பிடலாம். முட்டையில் புரதம் மற்றும் பி வைட்டமின்கள், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன.
6/7

வேக வைத்த முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது. புரோட்டீன் ஷேக்கில் சேர்க்கலாம். புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகளும் இதில் நிறைந்துள்ளன. இதோடு, சூரியகாந்திவிதை, பூசணி விதை உள்ளிட்டவற்றையும் சேர்த்து சாப்பிடலாம்.
7/7

யோகர்ட் மற்றும் ப்ரோபயாடிக்குகளின் நல்ல ஆதாரமாக இருந்தாலும், சர்க்கரை சேர்க்கப்பட்ட யோகர்ட் காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்காது. அதற்கு பதிலாக, வீட்டில் தயார் செய்யும் தயிர் சாப்பிடலா,. கடைகளில் வாங்குவதாக இருந்தால் இனிப்பு சேர்க்கதாகவற்றை வாங்கலாம்.
Published at : 04 Aug 2024 01:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion