மேலும் அறிய

Top 10 Actress: நயன்தாரா முதல் நஸ்ரியா வரை; அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் - மற்றும் அவர்களின் Networth விவரம்!

நயன்தாரா, நஸ்ரியா, கல்யாணி பிரியர்ஷன் உள்ளிட்ட டாப் 10 நடிகைகள் பற்றியும் அவர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் சொத்துமதிப்பு உள்ளிட்ட விவரங்கள்.

சினிமா மீதான காதல் காரணமாக நடிகைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த தமிழ் சினிமாவில் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனுபமா பரமேஸ்வரன், மஞ்சு வாரியர் போன்ற நடிகைகள் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளனர். சரி நயன்தாரா முதல் கல்யாணி பிரியதர்ஷன் வரையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் பட்டியல் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

நயன்தாரா:

நயன்தாராவின் சினிமா மீதான காதல், கதைகளை தேர்வு செய்யும் விதம் ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலும் எல்லா படங்களுமே நல்ல வரவேற்பை போற்றுகின்றன. நடிப்பில் காரணமாக தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு படத்திற்கும் சுமார் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். இவருடைய சொத்து மதிப்பு மட்டும் ரூ.200 கோடி என்று சொல்லப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ்:

தமிழ், தெலுங்கு மற்றும் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ஹிந்தியிலும் இப்போது அறிமுகமாகியுள்ளார். வருண் தவானின் 'பேபி ஜான்' படம் மூலமாக ஹிந்தியில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இப்போது தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.41 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.


Top 10 Actress: நயன்தாரா முதல் நஸ்ரியா வரை; அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் - மற்றும் அவர்களின் Networth விவரம்!

நஸ்ரியா நசீம்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நஸ்ரியா நசீம் 'ராஜா ராணி' படம் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றார். ஒரு சில தமிழ் படங்களில் நடித்த நிலையில் போதுமான வரவேற்பு இல்லாத நிலையில் இப்போது மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறைந்தது ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரையில் இவர் சம்பளம் பெறுகிறார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.12 கோடி முதல் ரூ.24 கோடி வரையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அனுபமா பரமேஸ்வரன்:

தற்போது தமிழில் அனுபமா பரமேஸ்வரன் நடித்த 'டிராகன்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காராணமாக இனிமேல் அவரது மார்க்கெட் அதிகளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.30 முதல் ரூ.33 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுக்கிறது.

மஞ்சு வாரியர்:

தேசிய விருது வென்ற நடிகை மஞ்சு வாரியர் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். விடுதலை 2 படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சமீப காலமாக தமிழில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வரையில் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.142 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுக்கிறது.


Top 10 Actress: நயன்தாரா முதல் நஸ்ரியா வரை; அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் - மற்றும் அவர்களின் Networth விவரம்!

நித்யா மேனன்:

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் ரவி மோகன் உடன் இணைந்து காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. ஒவ்வொரு படத்திற்கும் ரூ.3 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.55 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மமிதா பைஜூ:

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் மமிதா பைஜூ பிரேமலு படம் மூலமாக அதிகளவில் பிரபலமானார். ரெபெல் படத்தில் நடித்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் விவி21 படத்திலும் நடித்து வருகிறார். இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார்.

அமலா பால்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். ஏராளமான படங்களில் நடித்த நிலையில் சினிமா வாய்ப்பில்லாமல் திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார். இவர், ஒவ்வொரு படத்திற்கும் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரையில் சம்பளம் பெற்றார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.32 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.


Top 10 Actress: நயன்தாரா முதல் நஸ்ரியா வரை; அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் - மற்றும் அவர்களின் Networth விவரம்!

பிரியாமணி:

பருத்திவீரன் படம் மூலமாக பிரபலமான பிரியாமணி தற்போது தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். தனது அழகான தோற்றம், நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரையில் சம்பளம் பெற்றார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.61 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

கல்யாணி பிரியதர்ஷன்:

தென்னிந்திய சினிமாவில் திறமையான மற்றும் இயற்கை அழகு, ஆகியவற்றின் காரணமாக சில வெற்றி படங்களை கொடுத்தார். கல்யாணி பிரியதர்ஷனின் நிகர சொத்து மதிப்பு தோராயமாக ரூ.4 கோடி முதல் ரூ. 5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் சம்பளமாக ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget