Good Bad Ugly Teaser : க்ளாஸ் அஜித் போய் மாஸ் அஜித் வந்தாச்சு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் இதோ
Good Bad Ugly Teaser : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

குட் பேட் அக்லி டீசர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்தும் த்ரிஷாவும் ஆறாவது முறையாக ஜோடியாக நடித்துள்ளார்கள். பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
Coming to deliver a knockout punch 💥💥#GoodBadUglyTeaser Premieres today at 7.03 PM ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) February 28, 2025
Here's the premiere link 🔥
▶️ https://t.co/evp1QJiedb
Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment 🤩
#AjithKumar @trishtrashers… pic.twitter.com/2ztWlU3NET
அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் செம வெயிட்டான சம்பவத்தை செய்திருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி அஜித்தின் கரியரில் மிக வித்தியாசமான படமாக இருக்கும் என்பதை இந்த டீசரை வைத்தே சொல்லலாம். படம் முழுவதும் அஜித்தின் வெவ்வேறு கெட் அப்களில் அஜித்தை பார்க்க ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்ஷன் விருந்து காத்திருக்கிறது.





















