வெளியான சிலமணி நேரத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த 'குட் பேட் அக்லீ' டீசர்!
அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள 'குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியான நிலையில் குட் பேட் அக்லீ டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் குட் பேட் அக்லீ . இது அஜித்தின் 63ஆவது படம். மார்க் ஆண்டனி ஹிட் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, எஸ் ஜே சூர்யா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லீ. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அபினந்தன் ராமானுஜம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டீசர் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பொதுவாக அஜித்திற்கும் வியாழக்கிழமைக்கும் ஒரு செண்டி மெண்ட் இருக்கும். அதோடு அவரது படங்கள் பெரும்பாலும் வி என்ற எழுத்திலேயே தொடங்கும். வீரம், வேதாளம், விவேகம், வலிமை, விஸ்வாசம், விடாமுயற்சி இப்படி எல்லா படங்களும் வி என்ற முதல் எழுத்திலேயே தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த சென் டிமெண்ட் கொஞ்சம் மாறி குட் பேட் அக்லீ படத்தோட டீசர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரை பார்க்கும் போது அஜித்தின் இளம் வயது கதாபாத்திரங்கள் கண் முன்னே வந்து வந்து போகிறது. அதில் வேதாளம், ரெட், அசல், மங்காத்தா, தீனா, பில்லா, ஏகன் என்று பல படங்களை சொல்லலாம். இது தவிர லியோ மற்றும் கேஜிஎஃப் படங்களின் காட்சிகளும் டீசரில் தென்படுகிறது. முழுக்க முழுக்க அஜித்திற்காகவே உருவாக்கபட்ட படம் போன்று இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருவது போன்று டீசரில் காட்டப்பட்டுள்ளது.
அஜித் பேசும் டயலாக்ஸூம் சரி, அவரது ஆக்ஷன் காட்சிகளும் சரி அஜித் ரசிகர்களை கொண்டாடச் செய்கிறது. ஏற்கனவே விடாமுயற்சி தான் போதுமான வரவேற்பு பெறவில்லையென்றாலும் இந்தப் படம் விடாமுயற்சி தோல்வியை சரி செய்யும் வகையில் இருக்கும் என்று டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. மேலும், குட் பேட் அக்லீ வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் டீசர் வெளியாகி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. டீசர் வெளியானது மட்டுமின்றி டீசரில் அஜித் பேசும் ஒவ்வொரு வசனங்களையும் சின்ன சின்ன வீடியோக்களாக கட் செய்து ஷார்ட்ஸிலும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் டீசர் வெளியாகி 4 மணி நேரத்திற்குள்ளாக 5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. அதோடு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இதன் மூலமாக குட் பேட் அக்லீ இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

