Seeman Angry on Vijayalakshmi | "திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?"பேட்டியால் கெட்ட சீமான்
பொதுவாக பேட்டிகளில் கொந்தளிப்பாக பேசும் சீமான், சமீபத்திய தனது பேட்டியால், பெண்களை துச்சமாக பேசியதால் பெண்களை கொந்தளிக்க செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்திய பேட்டி ஒன்றில், பெண்களை துச்சமாக மதித்து பேசியது, பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான பாலியல் வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு அவர் அளித்த பதில், அனைவரையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், பாலியல் வழக்கு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சிரித்து, நக்கலடித்துக்கொண்டே பேசிய சீமான், ”நான் ஏதோ வயதுக்கு வந்த பெண்ணை குச்சிகட்டிலிருந்து தூக்கிக்கொண்டுபோய் சோளக்காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுபோல் கதறுகிறீர்களே” என்று பேசி அதிர்ச்சியளித்தார்.
அவரது இந்த பேச்சுக்களிலிருந்து, பெண்களை பற்றி அவரது மனதில் என்ன நினைத்திருக்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நடிகை விஜயலட்சுமிக்கு அவர் செய்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்பது போல பேசும் அவர், இளம் பெண்களை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வது அவ்வளவு சாதாரணம் என்கிறாரா? அப்படி அவர் செய்தால், அதைத்தான் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்கிறாரா என பெண்கள் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
என்ன வயதானாலும், பெண் என்பவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். இளம் பெண்களுக்கு நடந்தால் மட்டுமே அது கொடுமை என்பதுபோல் பேசும் சீமான், பெண்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவு தானா என்ற கேள்விகள் எழுகின்றன. அதிலும், பெண்களை அருகில் வைத்துக்கொண்டே இவ்வாறு சீமான் பேசியதற்கு கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.





















