Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் சந்தித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் சகோதரருமான மு.க. அழகிரி, இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்குச் சென்று சகோதரர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், நாளை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. அப்போது, ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார் அழகிரி.
தம்பியை சந்தித்த அண்ணன்:
மு.க அழகிரி , முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கச் சென்ற போது, அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதியுடன் சென்றார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
அப்போதைய சந்திப்பின் போது, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மு.க அழகிரி, அவரது மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதி ஆகியோர் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவரது அண்ணன் மு.க. அழகிரி. உடன் இருப்பவர் அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதி pic.twitter.com/qyzovhWDZv
— இராமானுஜம் கி | Ramanujam K (@ramnellai) February 28, 2025
அரசியல் பிரவேசத்தில் அழகிரி
பல வருடங்களாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் , அவரது சகோதரர் அழகிரிக்கும் இடையே முரண்பாடு காரணமாக, பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுக கட்சியை விட்டும் , அழகிரி ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,பல வருடங்களுக்கு பிறகு அழகிரி , சகோதரர் ஸ்டாலின் வீட்டிற்கே சென்று, சந்தித்து இருப்பது, அவர்களுக்கு இடையேயான , முரண்பாட்டை நீக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
மேலும் , மதுரையின் திமுகவின் முகமாக இருந்த வந்த அழகிரி, மீண்டும் திமுக கட்சிக்குள் வந்து , அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவின் அரசியல் பிரவேசத்தை, அழகிரி கையில் எடுக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், தென் மாவட்டங்களில் திமுக கட்சியானது, மேலும் வலுப்படும் என்றும் பேசப்படுகிறது.
Also Read: CM Stalin: அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?..தடைகளை உடைப்போம்- முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

