Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
NTK Seeman: காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக முடியாது என நேற்றைய தினம் சீமான் கூறிய நிலையில், இன்று இரவு 8 மணிக்கு ஆஜராகுகிறார், சீமான்.

இன்று கட்சி பணியின் காரணமாக, தருமபுரி சென்ற சீமான், அங்கிருந்து சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு மாலை வந்தடைந்தார். இவர் , இன்று இரவு 8 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் , நடிகை கொடுத்த புகார் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுகிறார்.
”கைதுக்கு பயம் இல்லை”
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது. “ விசாரணைக்கு வருவதாக கூறினேன், காவல்துறைதான் 8 மணிக்கு வரச் சொன்னது.
எனக்கு வரும் சம்மனை அனைவரும் படிக்க வேண்டும் அவசியம் இல்லையே, திட்டமிட்டு என்னை அவமானப்படுத்தும் வகையில் கதவில், சம்மனை ஒட்டியுள்ளனர். எனக்கு வரும் சம்மனை வைத்து சாமி கும்பிடவா முடியும். என் வீட்டில் கைது செய்தவர்களை, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
அந்த பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாததால், இபிஎஸ் காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை சமாளிக்க முடியாத நேரங்களில் பாலியல் புகாரை கையில் எடுக்கிறார்கள். வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். கைதுக்கு பயப்படும் ஆள், நான் இல்லை என சீமான் தெரிவித்தார். அப்போது, “அந்த பயம் இருக்கணும்” என்று விஜய்யின் துப்பாக்கி பட டயலாக்கை சீமான் கூறினார்.

படம் : கோப்பு காட்சி
நாதகவினருக்கு அழைப்பு:
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமையிடமிருந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வருமாறு, கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், பெண்கள பாசறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாதகவினர் பலர் கூடி வருதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, ஆயுதப்படை காவலர்கள் பலர் , வளசரவாக்கம் காவல் நிலையத்தில் குவிந்து, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: சீமான் வீட்டிற்குச் சென்ற காவலரை நோக்கி துப்பாக்கி காட்டியவர் யார்? குவியும் நாதகவினர்.!
சீமான் வழக்கு என்ன?
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, 2011 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சீமான் துன்புறுத்தியதாக பாலியல் புகார் அளித்தார். ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டும் , சீமானுக்கு எதிராக பாலியல் புகாரும், பணம் பறித்தாதாகவும் புகார் கொடுத்தார்
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 2011 ஆம் ஆண்டு புகாரை ரத்து செய்யவேண்டும் என்று உயநீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தார்.
இந்த வழக்கானது சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் நடிகையின் குடும்பத்தினர் சீமானை அணுகி உள்ளனர். சீமான், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார். அதேபோல் சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். சீமானின் வற்புறுத்தலால் ஏழு முறை கரு கலைப்பும் நடிகை செய்திருக்கிறார். அதேபோல் அவரிடம் இருந்து பெரும் பண தொகையையும் சீமான் பெற்றுள்ளார் என்றும் சீமானுக்கு எதிராக நடிகையின் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏன் புகாரை திரும்ப பெற்றார் என்று கேள்வி எழுப்பினர், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக நடிகை கூறியுள்ளார்” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான்,புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, வழக்கை 12 வாரங்களுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றம் 12 வாரங்கள் காலக்கெடு விடுத்ததையடுத்து, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் , இன்று இரவு 8 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக உள்ள நிலையில் , ஆயுதப்படை காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களையும், காவல் நிலையத்தின் முன்பு நிறுத்தியுள்ளனர் காவல்துறையினர்.
Also Read: Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.!




















