மேலும் அறிய
Advertisement

சுவையான திருநெல்வேலி சொதிக்குழம்பு எப்படி செய்வது? இதோ ரெசிபி!
திருநெல்வேலியின் பிரபலமான சொதிக்குழம்பு எப்படி செய்வது என்பதை காணலாம்.

சொதிக்குழம்பு
1/5

சொதி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் – 25 பூண்டு – 5 பற்கள் உருளைக்கிழங்கு – 1 பட்டாணி – ஒரு கப் கேரட் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது) பீன்ஸ் – ஒரு கப் முருங்கைக்காய் – 1 கத்தரிக்காள் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - இஞ்சி விழுது – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் பால் – 2 கப் (முதல் மற்றும் இரண்டாவது பால்) வேகவைத்த பாசிப்பருப்பு – ஒரு கப் எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன் தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – கால் ஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு கொத்து.
2/5

ஒரு கடாயினை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவேண்டும். நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கலந்துவிட்டு, பச்சை மிளகாய் இஞ்சி விழுது சேர்க்கவேண்டும். உப்பு சேர்த்து கலந்து, இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவேண்டும்.
3/5

வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். பின்னர் இறக்கி வைத்து 5 நிமிடம் ஆறவிட்டு பிறகு அதில் முதல் முறையாக எடுத்து தேங்காய் பால் சேர்த்து கலந்துவிட வேண்டும். அடுத்தப்படியாக தாளிப்பதற்கு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.
4/5

தாளிப்பை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் கழித்து சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும். அவ்வளவுதான் கமகமக்கும் சுமையான சொதி குழம்பு தயார்.
5/5

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், உப்புமா என எதற்கு தொட்டு சாப்பிடாலும் அதன் சுவை அள்ளும்
Published at : 17 Sep 2024 05:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion