மேலும் அறிய

Kash Patel: அடேங்கப்பா..! அமெரிக்கா உளவுத்துறையின் இயக்குனராக இந்தியர் நியமனம் - யார் இந்த காஷ் படேல்?

Kash Patel US FBI Director: இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் அமெரிக்க உளவுத்துறை அமைப்பான, FBI-யின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Kash Patel US FBI Director: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், காஷ் படேல் அமெரிக்க உளவுத்துறை அமைப்பான FBI-யின் இயக்குனராகியுள்ளார்.

FBI-யின் இயக்குனரான காஷ் படேல்: 

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட், அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர விசுவாசியான காஷ் படேலை, அந்நாட்டின் உயர்மட்ட சட்ட அமலாக்க நிறுவனமான FBI இன் இயக்குநராக அறிவித்துள்ளது. அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு செனட் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வாக்கெடுப்பில் 51-49 வாக்குகளுடன், 44 வயதான படேலின் நியமனம் உறுதி செய்யப்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு பயனற்றதாக மாறியது.

உட்கட்சியிலேயே எதிர்ப்பு:

இரண்டு குடியரசுக் கட்சி செனட்டர்களான மைனேயைச் சேர்ந்த சூசன் காலின்ஸ் மற்றும் அலாஸ்காவைச் சேர்ந்த லிசா முர்கோவ்ஸ்கி ஆகியோரைத் தவிர, மற்ற அனைவரும் படேலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேற்குறிப்பிட்ட இருவரும்,  38,000 பேர் கொண்ட கூட்டாட்சி புலனாய்வுப் பிரிவின் தலைவராக படேலை நியமிக்க வேண்டாம் என்று வாக்களித்தனர். சதி கோட்பாடுகளை ஊக்குவித்ததாகவும், ஜனவரி 6, 2021 அன்று தலைநகரைத் தாக்கிய டிரம்ப் ஆதரவு கலகக்காரர்களைப் பாதுகாத்தததாகவும் கூறி படேல் நியமனத்தை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவைத் தேர்வுகளுக்கும் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இது, குடியரசுக் கட்சியின் மீதான அவரது இரும்புப் பிடியை விளக்குகிறது. 

யார் இந்த காஷ் படேல்?

டிரம்ப் பதவியேற்றதிலிருந்து FBI கொந்தளிப்பில் உள்ளது. பல அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதற்காகவும், ரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதற்காகவும் டிரம்ப் மீதான வழக்குகளில் ஈடுபட்ட சிலரும் அடங்குவர். இந்நிலையில் தான், பேஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று, கூட்டாட்சி வழக்கறிஞராகப் பணியாற்றிய படேல் FBI-யின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஷ்யப் பிரமோத் வினோத் படேல் பிப்ரவரி 25, 1980 அன்று, நியூயார்க்கின் கார்டன் சிட்டியில், இந்திய குஜராத்தி தம்பதிக்கு பிறந்தார். அவரது பெற்றோர் முதன்முதலில் 1970களின் தொடக்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் உகாண்டாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர்கள் இன ஒடுக்குமுறையை எதிர்கொண்டதை தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர்.  அவரது தந்தை ஒரு விமான நிறுவனத்தில் நிதி அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார். படேல் லாங் தீவில் உள்ள கார்டன் சிட்டி உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார் .

காஷ் படேல் மகிழ்ச்சி

இந்நிலையில் காஷ் படேல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் நிறுவனத்தின் ஒன்பதாவது இயக்குநராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். 9/11 தாக்குதலுக்குப் பிறகு நமது நாட்டைப் பாதுகாப்பது வரை FBI ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மரபைக் கொண்டுள்ளது. நமது நீதி அமைப்பின் அரசியல்மயமாக்கல் பொதுமக்களின் நம்பிக்கையை அரித்துவிட்டது - ஆனால் அது இன்றுடன் முடிவடைகிறது. இயக்குநராக எனது பணி தெளிவாக உள்ளது: போலீசார் போலீசாராக இருக்கட்டும் - FBI மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம். பீரோவின் அர்ப்பணிப்புள்ள ஆண்கள் மற்றும் பெண்களுடன் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி, அமெரிக்க மக்கள் பெருமைப்படக்கூடிய ஒரு FBI-ஐ மீண்டும் கட்டியெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் ஆட்சியில் இந்தியர்கள்:

ட்ரம்ப் ஆட்சியில் இந்தியா வம்சாவளியினருக்கு தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தியாவின் கொல்கத்தாவில் 1968 ஆம் ஆண்டு பிறந்த ஜெய் பட்டாச்சார்யா, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு இந்தியாவின் சண்டிகரில்  பிறந்த ஹர்மீத் கே. தில்லான் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த கிருஷ்ணன் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், அமெரிக்காவின் உச்சபட்ச விசாரணை அமைப்பான, FBI-யின் இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டு இருப்பது, ஆச்சரியத்தையும், எதிர்க்கட்சிகளைடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
Embed widget