5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா
மங்களூரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணம் குறித்து சிறுவன் ஒருவன் எழுப்பிய கேள்வியால் நிர்மலா சீதாராமன் வியப்படைந்துள்ளார். நிதியமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்ட போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் கேள்வி எனக்குறிப்பிட்டு தொகுப்பாளர் கேள்வியை வாசிக்க தொடங்கினார்.அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த கேள்வியை அவரே என்னிடம் நேரடியாக கேட்கட்டும் எனக்கூறி அந்த சிறுவனை மேடைக்கு அழைத்தார். மேடைக்கு வந்த சிறுவன்,
பணம் குறித்த இந்த ஒரு விஷயத்தை ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள் ?
இருக்கையில் இருந்து எழுந்த நிர்மலா சிறுவனை அரவணைத்து பாராட்டினார்.
இது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம்
நீ எந்த class படிக்கிற?
5 th class!
நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா..
நான் ஐந்தாம் வகுப்பு படித்த போது இதைப்ப்ற்றி எல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை
எந்த SCHOOL-ல படிக்கிற?
உங்க வீட்டில் யாரும் நிதி சம்பந்தமான துறைகள்-ல பணி புரிகிறார்களா?
அதாவது அப்பா வங்கியிலோ அம்மா அரசின் கருவூலத்துறையிலோ..அது மாதிரி எதாவது
எப்படி உனக்கு இந்த யோசனை வந்தது?
உங்க அப்பா என்ன செய்கிறார்?
அம்மா HOUSEWIFE..அப்பா BUSINESSMAN
போய் உட்காரு
இவ்வளவு இளம் வயதில் பணம் குறித்த சிந்தனையுடன் வளர்த்ததற்கு அந்த குழந்தையின் பெற்றோரை நான் பாராட்ட விரும்புகிறேன்
பாருங்கள்.. நிதி குறித்த சிந்தனை ஐந்தாம் வகுப்பு படிப்போருக்கு வந்துவிட்டது
அந்த குழந்தையால் அவருக்கு என்ன தேவை என்பதை இவ்வளவு தெளிவாக சொல்ல முடிகிறது
ஒவ்வொரு குழந்தையிடமும் பணம் குறித்த இத்தகைய விழிப்புணர்வு இருக்க வேண்டும்
நான் மிகவும் வியப்படைகிறேன்
வங்கிகள் அதிகமாக உள்ள ஒரு பகுதியில் இடுப்போருக்கு இதுபோன்ற கேள்விகள் எழாமல் இருக்குமா…ஆனாலும் இந்த சிறுவன் என்னை வியப்படைய செய்துவிட்டான்.
சிண்டிகேட் வங்கியின் ONELINER இது
LET YOU FIRST EXPENDITURE BE SAVING
[உங்களின் முதல் செலவினம் சேமிப்பாக இருக்கட்டும்!]
ஒவ்வொரு குழந்தையும் பணம் கொடுத்து லாலிபாப், கிஃப்ட் என தனக்கு ஒரு பொருளை வாங்கும் முன், உங்களது சேமிப்பில் [உண்டியலில்] கொஞ்சம் பணத்தைபோட வேண்டும்
பணத்தை எப்படி கையாள்வது என்பதே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய முதல் மற்றும் முக்கிய பாடம்
பணத்தை எப்படி பொறுப்பாக கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்
இந்த சிறுவனின் கேள்வியில் அவ்வளவு பொறுப்பு நிறைந்துள்ளது.