Annamalai: காலையிலேயே பழிவாங்கிய அண்ணாமலை - பாஜக ஆக்ரோஷமான ட்விட்டர் பதிவு..! என்ன இருக்கு?
Annamalai BJP: #GetOutStalin என்ற ஹேஷ்டேக்குடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Annamalai BJP: திமுக அரசை விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை ட்விட்டர் பதிவு:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஒரு குடும்பத்தின் ஆதிக்க மனப்பான்மை, கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிளவுபடுத்தும் அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டில் உள்ள இந்த திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், #GetOutStalin என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children,… pic.twitter.com/VyD0BgPLfk
— K.Annamalai (@annamalai_k) February 21, 2025
புகைப்படத்தில் என்ன இருக்கு?
அதோடு இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில், “ தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் மாணவி, வேங்கைவயல், ஒயின் ஷாப், விவசாயிகள் பிரச்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான நபர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருப்பது, கனிமவள கொள்ளை, தரமற்ற பேருந்துகள், கள்ளச்சாராயம், பழவந்தாங்களில் அண்மையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை, மின்வாரியத்தில் ஊழல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு, ஆவின் நிவாகத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை, மழைவெள்ள பாதிப்பு மற்றும் மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்த குற்றச்சாட்டு” ஆகியவற்றை உணர்த்தும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ட்ரெண்டான #GETOUTMODI
மத்திய அரசு தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையை திணிப்பதாக, திமுக கூட்டணி அரசு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று #GETOUTMODI என்ற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்டானது.
பழிவாங்கிய அண்ணாமலை?
இதுகுறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கெட் அவுட் மோடி என்ற வார்த்தையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தினார். இப்போது கெட் அவுட் மோடி ட்ரெண்ட் செய்கிறார்கள். நாளை காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்வீட் போடுவேன். தமிழ்நாட்டில் இருந்து ஸ்டாலின் வெளியேற வேண்டும் என்று ட்வீட் போடுவேன். நாளை பாஜகவின் காலம். இரு நாட்களில் எவ்வளவு ட்வீட் போடுகிறீர்கள் என்பதை பார்த்து கொள்வோம். இதனை சவாலாகவே சொல்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, சரியாக இன்று காலை 6 மணிக்கு #GetOutStalin என்ற ஹேஷ்டேக் உடன், திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை ட்விட் செய்துள்ளார். அந்த ஹேஷ்டைக்கை பயன்படுத்தி பாஜகவினரும் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

