மேலும் அறிய
Creamy Cucumber salad: ஹெல்தியான சாலட் செய்ய வேண்டுமா?இதோ ரெசிபி!
Creamy Cucumber salad: வெள்ளரிக்காய் சாலட் செய்வது எப்படி என காணலாம்.

வெள்ளரிக்காய் சால்ட்
1/6

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும். சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம்.
2/6

வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.
3/6

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு உடலுக்கு கொடுக்க கூடியது வெள்ளரிக்காய்.
4/6

என்னென்ன தேவை? வெள்ளரிக்காய் - 4 வெங்காயம் - 1 தக்காளி- 1 தயிர் / யோகர்ட் - 2 கப் எலுமிச்சை சாறு - சிறிதளவு கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
5/6

வெள்ளரிக்காயை தோல் நிக்கி சுத்தம செய்யவும். இதை வட்ட வடிவில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்க்கவும்.
6/6

இப்பொது கெட்டித்தயிர் அல்லது யோகர்ட்டை வெள்ளரிக்காயில் சேர்ந்த்து நன்றாக கலக்கவும். இதற்கு தேவையான உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறினால் வெள்ளரிக்காய் சாலட் தயார்.
Published at : 01 Nov 2024 01:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement