Donald Trump: அது வர்ற நாள் தூரத்துல இல்ல..ஆனா நான் தடுத்துடுவேன்..ட்ரம்ப் எதைப் பற்றி கூறினார் தெரியுமா.?
அந்த விஷயம் நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை, ஆனால் என்னுடைய தலைமை அதை தடுத்துவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் எதைப் பற்றி கூறினார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்து, ஆனால் அது நடக்காமல் தனது தலைமை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அவர் எந்த விஷயத்தை பற்றி அப்படி கூறியுள்ளார் என இப்போது தெரிந்துகொள்வோம்.
உலகப்போர் 3 குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் நடைபெற்ற உச்சிமாநாடு ஒன்றில் பேசிய அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப், தற்போதைய சூழலில், மூன்றாவது உலகப்போர் உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அப்படி ஒரு சூழல் உருவாகாமல் தனது தலைமை தடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.
ஜோ பைடனை வறுத்தெடுத்த டொனால்ட் ட்ரம்ப்
அதே சமயம், மூன்றாவது உலகப்போரினால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை என்றும், ஜோ பைடனின் தலைமை இன்னும் ஓராண்டிற்கு தொடர்ந்திருந்தால், அத்தகைய சூழல் உருவாகியிருக்கும் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டினார். ஆனால், தற்போது தலைமை மாறிவிட்டதால், அப்படி ஒரு சூழல் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
தற்போது நடைபெற்றுவரும் மோதல்களில் பங்கேற்பதை தவிர்க்கும் அதே வேளையில், முடிவில்லாத போர்களை தடுத்து நிறுத்த தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் ட்ரம்ப் உறுதி அளித்தார். எந்த ஒரு நாட்டை விடவும் வலுவானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் விளங்கினாலும், அமெரிக்கா போரை எதிர்கொள்வதை விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் விளக்கமளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

