மேலும் அறிய
Maravalli Kizhangu Murukku:மரவள்ளிக்கிழங்கில் முறுக்கு; எப்படி செய்வது?இதோ ரெசிபி!
Maravalli Kizhangu Murukku: தீபாவளி பண்டிகையை கொண்டாட மரவள்ளிக் கிழங்கு முறுக்கு செய்து அசத்துங்க.
முறுக்கு
1/5

தீபாவளி பலகாராம் செய்யும்போது ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டும் என்று திட்டம் இருக்கா. இதோ மரவள்ளி கிழங்கு முறுக்கு. எப்படி செய்வது என்று காணலாம்.
2/5

தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு மாவு - 1 கப், அரிசி மாவு, கடலைமாவு - தலா 1 கப், மிளகாய்த் தூள் - ½ டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 4 டீஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
3/5

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளைப் போட்டு, எள், மிளகாய் தூள் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத் தூளை சிறிது தண்ணீரில் கரைத்து மாவுக்கலவையில் ஊற்றி முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
4/5

. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். எள்ளுக்கு பதில் ஓமம் சேர்க்கலாம்.
5/5

மரவள்ளிக்கிழங்கு மாவு கிடைக்கவில்லை என்றால் மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து முறுக்கு மாவுப் பதத்தில் கெட்டியாக அரைக்கலாம்.
Published at : 30 Oct 2024 03:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















