மேலும் அறிய
Advertisement

Mutton Nalli Recipe : சுவையான நல்லி நிஹாரி செய்வது எப்படி?
Mutton Nalli Recipe : இந்த நல்லி நிஹாரி ஆப்பம், இடியாப்பம், கோதுமை பரோட்டாவிற்கு சூப்பராக இருக்கும்.

நல்லி கறி
1/6

தேவையான பொருட்கள் : நல்லி எலும்பு - 1/2 கிலோ, வறுத்த வெங்காயம் - 1 கப், கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி, இஞ்சி, நெய் - 2 மேசைக்கரண்டி, தண்ணீர், உப்பு, சீரகம் - 2 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, பிரியாணி இலை, மிளகு - 1 தேக்கரண்டி, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், அன்னாசி பூ , கிராம்பு, கருப்பு ஏலக்காய் - 2 , பச்சை ஏலக்காய் - 4 , வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 தேக்கரண்டி, கச கசா - 1 தேக்கரண்டி, காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 5, இஞ்சி தூள் - 1 தேக்கரண்டி
2/6

செய்முறை : ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லி எலும்புகளை சேர்த்து 30 நிமிடம் வேகவைக்கவும். 30 நிமிடத்திற்கு பிறகு, குக்கரில் விசில் போட்டு ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும் .
3/6

நல்லி நிஹாரிக்கு மசாலா தூள் செய்ய ஒரு கடாயில் சீரகம், சோம்பு, பிரியாணி இலை, மிளகு, பட்டை, ஜாதிக்காய், அன்னாசி பூ, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பொட்டுக்கடலை, கச கசா, கஷ்மீரி சிவப்பு மிளகாய் வத்தல் மற்றும் இஞ்சி தூள் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் இல்லாமல் வதக்கி தூளாக அரைத்துக் கொள்ளவும்.
4/6

ஒரு பாத்திரத்தில், சிறிதளவு நெய் ஊற்றி வேகவைத்த நல்லி கறி, அரைத்த நல்லி நிஹாரி மசாலா தூள், வறுத்த வெங்காயம், நல்லி கரி வேகவைத்த தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
5/6

அடுத்தது, நல்லி கறியை நன்கு கிளறிவிடவும். குழம்பு கெட்டியாக வருவதற்கு கோதுமை மாவை தண்ணீரில் கலந்து சேர்க்கவும்.
6/6

அதன் பின், பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும் . கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான நல்லி நிஹாரி ரெடி
Published at : 14 May 2024 12:29 PM (IST)
Tags :
Mutton Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion