நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Nithyananda Live: நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், நாளை நேரலையில் தோன்ற உள்ளதாக நித்தியானந்தா ஆசிரமம் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Nithyananda Live: நித்யானந்தா உடலை விட்டு பிரிந்து விட்டதாக பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் , அவர் உடல் ஆரோக்கியத்துடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாசா தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில், நேரலையில் தோன்ற உள்ளதாகவும் , இறந்துவிட்டார் என்ற பொய் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் கைலாசா தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், எப்போது நேரலை தோன்றுகிறார் என்றும் மற்றும் எதில் நேரலையில் தோன்றுவார் என்பது குறித்தான தகவலை பார்ப்போம்.
நித்தியானந்தா- கைலாசா:
உலக அளவில், நித்தியானந்தாவுக்கு பெருமளவில் ரசிகர்களும் சீடர்களும் உள்ளனர். பெரும் பிரபலமாக இருந்த நித்தியானந்தா, பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் சீடர்களைத் தவறாக வழி நடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெங்களூருவில் அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நித்தியானந்தாவுக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து, இந்தியாவை விட்டே நித்தியானந்தா தலைமறைவு ஆனார். 2020ஆம் ஆண்டு கைலாசா என்னும் இந்து நாடு உருவாக்கப்பட்டதாகவும் அறிவித்தார். தன் நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றை உருவாக்கி நித்தியானந்தா வெளியிட்டார். இது மட்டுமன்றி, கைலாசா நாட்டிற்கு புதியவர்கள் வரலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
நித்தியானந்தா மரணம் ?
இந்நிலையில் எங்கே கைலாசா இருக்கிறது என பலரும் தீவிரமாக தேட ஆரம்பித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், வடக்கு பசிபிக் தீவுகளில் கைலாசா இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து கொண்டு, யூடியூப் நேரலையில் தோன்றி, அவரது பக்தர்களுக்கு உரை நிகழ்த்துவார். இந்த நிலையில் நித்தியானந்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று தகவல் பரவியது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரும் தனது தினசரி ஆன்லைன் பிரசங்கத்தைக் குறைத்துக் கொண்டார். இதற்கிடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலானது பரவி பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியது. எனினும், அதில் உண்மையில்லை என்று நித்தியானந்தாவே வீடியோவில் தோன்றிப் பேசினார். ஆனாலும் அவர் தனது பழைய உற்சாகத்துடன் பேசவில்லை, களைப்பாக உள்ளார், உடல்நலக் குறைவுடன் இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.
"உயிர்த் தியாகம்"
இந்த நிலையில் தற்போது, நித்தியானந்தா மரணம் அடைந்ததாக, அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை அன்று வீடியோவில் பேசி இருந்தார். இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்ததாகவும் கூறி இருந்தார். இந்தத் தகவல் வைரலாகப் பரவி வரும் நிலையில், நித்தியானந்தாவுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நேரலையில் நித்தியானந்தா:
Breaking News! நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்! ஏப்ரல் 3, 2025 | 4:30 AM
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 2, 2025
பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வத்தையும் எழுப்பி உள்ளது.
இன்னிலையில் ஏப்ரல் 3-ஆம் தேதி 4:30 AM… pic.twitter.com/p7alTjxIkJ
ஆனால், இதுகுறித்து கைலாசா தரப்பு தெரிவித்திருப்பதாவது, நித்யானந்தா பரமசிவம் உடலை விட்டு பிரிந்துவிட்டதாக பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் , அவர் உடல் ஆரோக்கியத்துடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக இருக்கிறது. நித்யானந்த பரமசிவம் நாளை ( ஏப்ரல் 3, 2025 ) காலை 4:30 மணிக்கு நேரலையில் தோன்றுகிறார். பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் மீதான வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகள், ஊகங்கள் மற்றும் உண்மையை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில் நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள் என கைலாசா நிர்வாகம் ( Kailash's SPH Nithyananda ) எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே இணைக்கப்பட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் நேரலை தோன்றுவார் என்றும் மற்றும் அந்த பதிவில் குற்ப்பிடப்பட்டுள்ள முகநூல், இன்ஸ்டா மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களில் நேரலையில் நித்தியானந்தா தோன்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















