ரூ.10,000 மட்டும் போடுங்க.. ரூ.12.35 கோடிய அள்ளி எடுக்கலாம் - அட்டகாசமான சேமிப்பு திட்டம் - முழு விவரம்
SIP Calculator: SIP எனப்படும் முறையான முதலீட்டு திட்டம் மூலம் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பை மேற்கொள்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

SIP Calculator: SIP எனப்படும் முறையான முதலீட்டு திட்டம் மூலம் வெறும் பத்தாயிரம் ரூபாயுடன் முதலீட்டை தொடங்கி, ரூ.12.35 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும்.
அஞ்சும் இளம் தலைமுறை தம்பதியினர்:
முந்தைய தலைமுறை தம்பதியினர் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளை சர்வசாதாரணமாக பெற்றெடுத்து வளர்த்தனர். ஆனால், இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளவே அச்சப்படுகின்றனர். அதற்கு பிரதான காரணம் அவர்களின் பொருளாதார நிலை. வாழ்க்கை முறையின் மேம்பாடுகளால், வாழ்வதற்கான செலவுகள் என்பது கடுமையாக உயர்ந்துள்ளது. இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதற்கே பட்ஜெட் போட வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு குழந்தையை பெற்று பரமாரிப்பு, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற செலவுகளை எதிர்கொள்ள இளம் தலைமுறை தம்பதியினர் அச்சப்படுகின்றனர். அவர்களுக்கான வரப்பிரசாதமாக தான், SIP எனப்படும் முறையான முதலீட்டு திட்டம் அமைந்துள்ளது.
முறையான முதலீட்டு திட்டம் (SIP):
முறையான நிதி திட்டமிடல் இருந்தாலே, பொருளாதார விவகாரத்தில் எந்த சூழலிலும் அச்சப்பட வேண்டியதில்லை. அதன்படி, பெற்றோர் குழந்தை பிறந்தவுடன் நிதித் திட்டமிடலைத் தொடங்குவது நல்லது. அதேநேரம், நீங்கள் எப்போதும் பெரிய தொகையுடன் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. மிகச் சிறிய தொகையில் உங்கள் குழந்தைக்காக முதலீடு செய்யத் தொடங்கி, காலப்போக்கில் முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். இந்த வழியில், பதின்பருவத்தை அடையும்போதே உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை உங்களால் சேமிக்க முடியும்.
SIP சேமிப்பு:
பெரிய தொகையைச் சேமிக்க விரும்பினால், குழந்தை பிறக்கும்போதே SIP சேமிப்பு கனக்கை தொடங்குவது நல்லது. சந்தையுடனான நேரடி பிணைப்பு இருப்பதால், SIP இல் உங்களுக்கு சில ஆபத்துகள் இருக்கும். ஆனால் நீண்ட கால SIP உங்களுக்கு வேறு எந்த திட்டத்திலும் சாத்தியமில்லாத வருமானத்தை அளிக்கும். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியின் சராசரி நீண்ட கால வருமானம் 12% என்று நிபுணர்கள் நம்புகின்றனர். சில சமயங்களில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் கருதப்ப்படுகிறது.


முதலீடு - வருவாய் விவரங்கள்
ரூ.10,000-த்தில் தொடங்குங்கள்:
குழந்தை பிறந்ததும் 10000 ரூபாய்க்கு SIP ஐத் தொடங்கினால், அவர்களின் 15 வயதிற்குள் நீங்கள் 12 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்கலாம். இதற்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீட்டுத் தொகையில் 10 சதவிகிதத்தை உயர்த்த வேண்டும்ன். இந்த டாப்-அப் எஸ்ஐபி என்பது உங்கள் வழக்கமான எஸ்ஐபி தவணைத் தொகையில் கூடுதல் தொகையை சேர்ப்பதாகும்.
ரூ.12.35 கோடி வருவாய் எப்படி சாத்தியம்?
குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு நீங்கள் 10,000 ரூபாய்க்கு SIP ஐ ஆரம்பித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் 12 மாதங்களில் மொத்தமாக நீங்கள் ரூ.1.2 லட்சத்தை முதலீடு செய்வீர்கள். அடுத்த ஆண்டு உங்களது முதலீட்டு தொகையை 10% அதிகரிக்க வேண்டும், அதாவது ரூ.1000. இந்த வழியில் உங்கள் SIP கணக்கிற்கான அடுத்த 12 மாதங்களுக்கான மாதத்தவனை ரூ.11,000 ஆகிவிடும். அடுத்த வருடம் ரூ.11,000-ல் 10%, அதாவது ரூ.1100 ஆக அதிகரிக்க வேண்டும், அதாவது உங்கள் எஸ்ஐபி ரூ.12,100 ஆகிவிடும். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் தற்போதைய தொகையில் 10% சேர்க்க வேண்டும்.
இந்த முறையில் SIP-யில் நீங்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்வதாக கருதுவோ. அப்படி செய்தால் திட்டத்தின் முடிவில் மொத்தமாக நீங்கள், 38 லட்சத்து 12 ஆயிரத்து 697 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். ஆனால் இதற்கான வட்டியான 12 சதவிகிதம் மூலம் 12 கோடியே 35 லட்சத்து 51 ஆயிரத்து 900 ரூபாய் மொத்த வருவாயாக கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தை நீங்கள் 18 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், SIP இலிருந்து 13 கோடியே 24 லட்சத்து 53 ஆயிரத்து 200 ரூபாயை வருவாயாக பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: எந்த ஒரு சேமிப்பு திட்டத்திலும் முதலீடு செய்யுங்கள் என ஏபிபி நாடு வாசகர்களை கட்டாயப்படுத்துவதில்லை. முதலீட்டு சந்தையில் உள்ள சேமிப்பிற்கான வாய்ப்புகளை வாசகர்களுக்கு தெரியப்படுத்தவே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு சந்தை என்பது எப்போதும் அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.





















