IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: குஜராத் அணி ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணிக்கு குஜராத் அணியினர் பந்துவீச்சில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.
170 ரன்கள் டார்கெட்:
குஜராத் அணியின் சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா கட்டுக்கோப்பாக பந்துவீசினார். வழக்கமான பேட்டிங் மைதானம் போல இல்லாமல் பெங்களூர் மைதானம் பந்துவீச்சிற்கு நன்றாக ஒத்துழைத்தது. லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் அதிரடியால் கடைசியில் 169 ரன்களை ஆர்சிபி அணி எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
சுதர்சன் - பட்லர் அபாரம்:
அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமாகி சுப்மன்கில் -சுதர்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கில் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய பட்லர் - சுதர்சன் ஜோடி சிறப்பாக ஆடியது. சுதர்சன் நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆட பட்லர் அதிரடி காட்டினார்.
இதனால், புவனேஷ்வர், ஹேசில்வுட், யஷ் தயாள் கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் ரஷீக்தர், குருணல் பாண்ட்யா பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கினர். அரைசதம் நோக்கி நகர்ந்த சாய் சுதர்சன் 36 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி 35 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது.
குஜராத் வெற்றி:
சிறபப்பாக ஆடிய பட்லர் அரைசதம் விளாசினார். மறுமுனையில் ரூதர்போர்டு அதிரடி காட்டியதால் கடைசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே குஜராத் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால், புவனேஷ்வர் மற்றும் ஹேசில்வுட் ஓவரில் சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை குஜராத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இறுதியில் 17.4 ஓவரில் குஜராத் அணி 170 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.
பட்லர் மாஸ்:
பட்லர் கடைசி வரை அவுட்டாகாமல் 39 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ரூதர்போர்டு 18 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். குஜராத் அணிக்கு இது 2வது வெற்றியாகும். ரஷீக்தர் 3 ஓவர்களில் 35 ரன்களையும், குருணல் பாண்ட்யா 3 ஓவர்களில் 34 ரன்களையும் வாரி வழங்கினார். இந்த தோல்வி மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து 3வது 3வது இடத்திற்குச் சென்றுள்ளது.

