IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
IPL 2025 RCB vs GT: ஆர்சிபி அணி குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது. இமாலய இலக்கை நிர்ணயிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IPL 2025 RCB VS GT: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 18வது சீசனின் 14 வது போட்டியில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
ஆர்சிபி முதலில் பேட்டிங்:
இந்த சீசனில் இதுவரை 2 போட்டிகளில் ஆடி பலமிகுந்த கொல்கத்தா மற்றும் சென்னை அணியை வீழ்த்தி நம்பிக்கையுடன் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. 2 போட்டிகளில் ஆடி 1 போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் அணியும் வெற்றிக்காக இன்று களமிறங்குகிறது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன்கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பேட்டிங் பலம்:
சொந்த மண்ணில் ஆடுவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர்கள் பில்சால்ட், விராட் கோலி அணிக்கு பக்கபலமாக உள்ளனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பது அவசியம் ஆகும். அதேபோல படிக்கல் அதிரடியை தொடர வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் படிதார் தனது இயல்பான அதிரடியைத் தொடர்ந்தால் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். பின்வரிசையில் லிவிங்ஸ்டன், டிம் டேவிட், குருணல் பாண்ட்யா இருப்பது பலமாக அமைந்துள்ளது.
அதேபோல, முன்னாள் சாம்பியன் குஜராத் அணிக்கு கில், சாய் சுதர்சன் பேட்டிங்கில் பலமாக உள்ளனர். அதிரடி மன்னன் பட்லர் அதிரடி காட்டினால் குஜராத் அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமையும். திவேதியா, ரூதர்போர்ட் அதிரடி காட்டினாலும் குஜராத் அணி பேட்டிங் வலுவாக மாறும். தமிழக வீரர் ஷாருக்கான் மிகப்பெரிய பவர் ஹிட்டர் என்பதால் அவரது ஆட்டம் குஜராத் அணிக்கு தேவையாக உள்ளது.
பவுலிங் பட்டாளம்:
பந்துவீச்சும் இரு அணிக்கும் பக்கபலமாக உள்ளது. ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யஷ் தயாள் வேகத்தில் பக்கபலமாக உள்ளனர். சுழலில் சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன் பலமாக உள்ளனர்.
குஜராத் அணியைப் பொறுத்தவரையில் ஆர்சிபி அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் உள்ளார். சின்னசாமி மைதானத்தில் மிகுந்த அனுபவம் கொண்ட அவர் அங்கு இருப்பது குஜராத்திற்கு பலமாக உள்ளது. மேலும், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா வேகத்தில் உள்ளனர். இவர்களுடன் சுழலில் சாய் கிஷோர் உள்ளார்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தைப் பாெறுத்தவரை பேட்டிங்கிற்கு மிகவும் உகந்த நாளாகும். இதனால், இன்றைய போட்டியில் ரன்மழை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ப்ளேயிங் லெவன்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரஜத் படிதார் தலைமையில் விராட் கோலி, பில் சால்ட், படிக்கல், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யஷ் தயாள் இடம்பிடித்துள்ளனர்.
குஜராத் அணியில் ப்ளேயிங் லெவனில் சுப்மன்கில் தலைமையில் சாய் சுதர்சன், பட்லர், ஷாருக்கான், திவேதியா, ரஷீத்கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா இடம்பிடித்துள்ளனர்.




















