ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகையோடு கூடிய இலவசக் கல்விக்கான ஐடிஐ மாணவர் சேர்க்கை டிச.31 வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

புதிதாக துவங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நோடி சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறும் எனவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்
தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு 2௦24-2025-ம் ஆண்டில் கீழ்க்காணும் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட 10 இடங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு தொழில் 4.0 மற்றும் நவீன கால தொழிற்பிரிவுகளுடன் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்க ஆணை இடப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,
இந்த சேர்க்கைக்கான கால அவகாசம் 31.12.2024 வரை வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சிக் கட்டணம் இல்லை; உதவித்தொகை உண்டு
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும்.
புதிதாக தொடங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கை#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/TriIkea11E
— TN DIPR (@TNDIPRNEWS) December 20, 2024
வேறு என்ன வசதிகள்?
தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள், தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்க்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: அலைபேசி எண்: 9499055689
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

