மேலும் அறிய

One Nation One Election | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP Lakshmanan

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவை அதிபர் ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை  என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன் அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். 

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்ற மக்களவைக்கும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகுக்கக் கூடியது.  இது தொடர்பான மசோதாக்களை மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்சூழலில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவை அதிபர் ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என்றும் அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா புதிய விசயம் கிடையாது, பாஜகவின் அடிப்படை கொள்கைகளில்  ஒன்று. ஒரே தேசம், ஒரே மொழி, பொதுசிவில் சட்டம் என்ற வரிசையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமும் ஒன்றாகும். 

ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவுகளை மிச்சப்படுத்தலாம், நடத்தை விதிகள் காரணமாக பல மாதங்களாக திட்டங்கள் முடங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜக கூறுவது உண்மை தான். அதை தாண்டி இந்த திட்டத்தால் வேறு எந்த பயனும் கிடையாது. ஆபத்து தான் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 129-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம்  இரண்டு விசயங்கள் சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இதில் மக்களவை தேர்தலுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் எப்போது நடைபெறுகிறதோ அது தான் ஆட்சிகாலத்தின் தொடக்கம். இதில் பிரச்சினை எங்கு தொடங்குகிறது என்றால் ஒரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் நினைத்தால் அந்த பின்னணியை விளக்கி குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பினால் அவர் எப்போது தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்வார். ஓரிடத்தில் மக்களவைத் தேர்தல் நடத்த சூழல் உள்ளபோது, சட்டமன்ற தேர்தல் நடத்த சூழல் இல்லை என்று கூறுகின்றனர் என்றால் இது ஏமாற்று வேலை இல்லையா?”என்று மத்திய அரசை விளாசியிருக்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில்  பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றபோது, அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்தியிருக்கலாம். ஆனால் சட்டமன்ற தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று கூறி பாஜக அரசு தேர்தல் நடத்தவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்தால் பாஜக இதே வேலையை பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளும். 
தங்களின் அரசியல் சுயலாபத்திற்காகவும், பிறரை பழிவாங்கவும் சட்டமன்ற தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் வரும் 2029ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, சூழல் சரியில்லை என கூறி மக்களவைக்கும் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் அடுத்த 6 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைகிறது எனில் அந்த அரசின் பதவிக்காலம் 4.5 ஆண்டு காலம் தான்.

இதேபோல், 2026 முதல் 2029 வரை 3 ஆண்டுகள் மட்டும் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் எனில் சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் விதமாக அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது நாட்டை அதிபர் ஆட்சி முறையை நோக்கி கொண்டு செல்வதற்கான தொடக்கப்புள்ளி”என்று விளாசியுள்ளார்.

செய்திகள் வீடியோக்கள்

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேற்கு வங்க முதியவரின் சிக்கலான மூட்டு பாதிப்பு: தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
மேற்கு வங்க முதியவரின் சிக்கலான மூட்டு பாதிப்பு: தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
யுபிஐ பரிவர்த்தனைக்கு வரியா? — தஞ்சையில் வணிகர்கள் கொந்தளிப்பு! கடையடைப்பு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!”
யுபிஐ பரிவர்த்தனைக்கு வரியா? — தஞ்சையில் வணிகர்கள் கொந்தளிப்பு! கடையடைப்பு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!”
Udumalpet Power Cut:  உடுமலைப்பேட்டையில் நாளை (09-10-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - இதோ முழு லிஸ்ட்
 உடுமலைப்பேட்டையில் நாளை (09-10-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - இதோ முழு லிஸ்ட்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget