Actress Maya: அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாததால் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை இழந்த நடிகை - யார்? என்ன நடந்தது?
அட்ஜஸ்ட்மென்ட் செய்யாத காரணத்தால் ரஜினியுடன் 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றி பிரபல நடிகை மாயா மனம் திறந்து பேசியுள்ளார்.

மலையாள திரையுலகின் 1975, 80 காலகட்டங்களில் படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு என்று தனியாக நடிகைகள் இருப்பார்கள். அவ்வாறு தமிழில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை மாயா. இவர் அந்த காலத்தில் தான் அட்ஜெஸ்ட்மென்ட் ஒத்துக்கொள்ளாத காரணத்தால் இழந்த பட வாய்ப்புகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
ஊசி இடம் கொடுத்தாதானே நூல் நுழையும்:
அதில் அவர் கூறியிருப்பதாவது, மூர்க்கன் (மலையாளம்) படத்துல பாலன் கே நாயர்னு ஒருத்தரு. ஃபுல்லா டைட்டா தண்ணி போட்டு ஆக்ட் பண்ணிட்டு இருந்தாரு மேடம். தப்பு. பாம்குரோவ் எதிரில் உள்ள வீட்டில்தான் ஷுட் பண்ணாங்க அப்போ. ஆனா மலையாள படம். அம்மாவை பாத்தா பயம் மேடம். கிருஷ்ணக்குமாரி பொண்ணுனானல டைரக்டா கேக்க சான்ஸ் இல்ல. அவங்க போயி யாருகிட்டயாவது மீடியாவுல சொல்லிருவாங்கனு பயம். இதுவரை ஃபீல்ட்ல நான் கெட்டுப்போகி வரல.
அதைத்தான் எல்லாருகிட்டயும் நாம சொல்றோம். முத்துராமன் வச்சுதான் கார்த்தி.. கார்த்தி வச்சுதான் கெளதம். ராதா வச்சுதான் அவங்க பொண்ணு. அந்த மாதிரி கேட்டகிரியில வந்தவதான் நான். ஆனா நிறைய ஃபீல் பண்ணிருக்கேன். அப்ரோச் பண்ணிருக்காங்க. அது வந்து நம்ம கையில இருக்கு. ஊசி இடம் கொடுத்தாதானே நூல் கோர்க்க முடியும்.
ரஜினி பட வாய்ப்பை இழந்தது எப்படி?
ஆறில் இருந்து அறுபதுவரை நான் நடிக்க வேண்டியது. நான் ஒத்துக்கலனு சொல்லவும் அட்வான்ஸ் கொடுத்ததை வாங்கிட்டு வேற ஒருத்தவங்களை போட்டுட்டாங்க. புவனா ஒரு கேள்விக்குறியில ஒரு ரஜினி ஜோடியா என்னை கூப்பிட்டு போனாங்க. ஒரு சாங் வரும் ரெண்டு சீன் வரும். அவங்க என்னை ட்ரை பண்ணாங்க. கிடைக்கலனு சொன்னதும். ஓவர்நைட்ல என்ன கட் பண்ணிட்டு மீராவை ரஜினிக்கு ஜோடியா மீராவை போட்டு. என்னை சிவக்குமார் ஜோடியா போட்டாங்க.
என் கண்மணி பாட்டு எல்லாம் கேக்குறப்ப எனக்கு ஒரு மாதிரி ஆகுது. இதுல ஒத்துக்காததுனா அதுல எப்படி அந்த கேரக்டருக்கு போடுவாங்க. இவ்வளவு நடந்தும் நான் ஒத்துக்காததால நான் இந்த படங்களை எல்லாம் இழந்துட்டேன். யாருமே இல்லாம ஒருத்தங்க வர்றாங்கனா சான்சே இல்ல மேடம். 100 சதவீதம் அடிச்சு சொல்லுவேன். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல இருந்துருக்கலாம். என்னோட காலத்துல இல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகை ஜெயா தமழில் 1967ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின்னர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ஏவிஎம் ராஜன், விஜயகுமார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாள படத்திலும் நடித்துள்ளார்.





















