மேலும் அறிய

”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிறகு அதே போன்ற பிரச்னையை வேறு இடங்களில் எழுப்பி இந்துக்களுக்கு தலைவர்களாகி விடலாம் பிரதமர் மோடியை மீண்டும் மறைமுகமாக என அட்டாக் செய்துள்ளார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்.

அயோத்தி ராமர் கோயிலை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகள் அதே மாதிரியான பிரச்னை எழ ஆரம்பித்துள்ளது. மசூதி அமைந்துள்ள இடங்களில் இதற்கு முன்பு கோயில் இருந்ததாக சொல்லி ஆய்வு நடத்துமாறு இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சம்பல் பகுதியில் ஏற்பட்ட எழுந்த மசூதி சர்ச்சை வன்முறையாகவே வெடித்தது.

இதுதொடர்பாக பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், ’ ”இந்தியாவில் நீண்ட காலமாக நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, புதிய புதிய இடங்களில் அதேப்போன்ற பிரச்னைகளைக் கிளப்புகின்றனர். அதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் ஒன்றாக ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை இந்தியாவால்தான் உலகுக்கு காண்பிக்க முடியும். முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் நாட்டை உலகிற்கு முன்மாதிரியாக மாற்றுவதற்கு உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்துக்களின் தலைவர்களாக நினைக்கிறார்கள் என பிரதமர் மோடியை மோகன் பகவத் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. மோகன் பகவத் அவ்வப்போது மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது விவாதமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் பயாலஜிக்களாக பிறக்கவில்லை, என்னை கடவுள் அனுப்பியிருக்கிறார் என்று பிரதமர் மோடி பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பிய நிலையில், சில மனிதர்கள் தங்களை சூப்பர் மேன் என நினைத்துக்கொள்வதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியிருந்தார். 

RSS-ன் மூத்த பிரமுகர்களுக்கும் மோடிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாக பேச்சு இருக்கிறது. மோடிக்கென்று தனிப்பட்ட வாக்கு வங்கி வளர்ந்திருக்கிறது. RSS-ஐ மீறிய ஒரு அமைப்பாக பாஜக விஸ்வரூபம் எடுத்துள்ளதை மூத்த பிரமுகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் இந்த பிரச்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்வதை RSS தலைவரே சுட்டிக்காட்டி பேசுவதாக எதிர் தரப்பினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காலத்தை கடந்த தொலைநோக்குப் பார்வை: ராஜராஜ சோழனுக்கு புகழாரம் சூட்டிய தஞ்சை மாவட்ட ஆட்சியர்
காலத்தை கடந்த தொலைநோக்குப் பார்வை: ராஜராஜ சோழனுக்கு புகழாரம் சூட்டிய தஞ்சை மாவட்ட ஆட்சியர்
ரூ.5 கோடி விவகாரம்… கைதான இன்ஸ்பெக்டரிடம் 24 மணி நேரம் விசாரணை! சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி
ரூ.5 கோடி விவகாரம்… கைதான இன்ஸ்பெக்டரிடம் 24 மணி நேரம் விசாரணை! சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
திருச்சியில் ரூ.2,600 கோடி நிலம்! 281 ஹெக்டேரில் சிப்காட் தொழிற்பூங்கா வருமா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுமா?
திருச்சியில் ரூ.2,600 கோடி நிலம்! 281 ஹெக்டேரில் சிப்காட் தொழிற்பூங்கா வருமா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
Embed widget