TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் (shortfall vacancies) நிரப்பப்பட்டுள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று கூறி உள்ளதாவது:
2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெரிவுப் பணிகளை விரைவாக நிறைவு செய்தல்
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-ல் 20 பதவிகளுக்கான 109 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிந்த 125 வேலை நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு தெரிவுப் பட்டியல் (selection list) விரைவாக 27.02.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்)-ல் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிவுகளை வெளியிடுதல், கணினி வழித் திரை சான்றிதழ் சரிபார்ப்பு, மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதற்கட்ட கலந்தாய்வுப் பணிகள் தேர்வு முடிந்த 184 வேலை நாட்களில் விரைவாக 12.03.2025 அன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) உடன் ஒப்பிடும்போது மேற்கண்ட பணிகள் 5 மாதங்களுக்கு முன்பாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை பதவிக்கான 21 காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்நிலைத் தேர்வு (preliminary examination) முடிந்த 161 வேலை நாட்களில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, முதன்மைத் தேர்வு நடத்துதல், முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தெரிவுப் பட்டியல் விரைவாக 14.03.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முதன்மைத் தேர்வுப் பதவிக்கு நடைபெற்ற தேர்வுடன் ஒப்பிடும் போது தெரிவுப் பணிகள் 6 மாதங்களுக்கு முன்பாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுதல்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1-ல் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் தேர்வு முடிந்த 57 வேலை நாட்களில் விரைவாக 14.03.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு -1 (தொகுதி 1 பணிகள்) உடன் ஒப்பிடும் போது தேர்வு முடிவுகள் 4 மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி IB பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் தேர்வு முடிந்த 48 வேலை நாட்களில், விரைவாக 20.02.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)-ல் 49 பாடத்தாள்களுக்கான தேர்வுகள், கணினி வழித்தேர்வு மூலம் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் 77 வேலைநாட்களில் விரைவாக 20.02.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை விரைவாக வெளியிடுதல்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)-ல், 60 பதவிகளுக்கான கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவுசெய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 16 வேலை நாட்களில் விரைவாக 17.03.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை விரைவாக வெளியிடுதல்.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV (தொகுதி IV பணிகள்) ல் கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதிலிருந்து, 30 வேலைநாட்களுக்குள் (தேர்வர்களுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் மற்றும் மீளபதிவேற்றம் செய்ய வழங்கப்பட்ட நாட்கள் நீங்கலாக). கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் விரைவாக 08.01.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களின் தெரிவுப் பட்டியலை விரைவாக அனுப்புதல்.
இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களின் தெரிவுப் பட்டியல் 270 துறை / அலகுகளின் நியமன அலுவலர்களுக்கு, கலந்தாய்வு முடிவுற்ற 14 வேலை நாட்களில் 10.03.2025 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
தட்டச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களின் தெரிவுப் பட்டியல் 193 துறை / அலகுகளின் நியமன அலுவலர்களுக்கு, கலந்தாய்வு முடிவுற்ற 14 வேலை நாட்களில் விரைவாக 25.03.2025 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களின் தெரிவுப் பட்டியல் 125 துறை / அலகுகளின் நியமன அலுவலர்களுக்கு, கலந்தாய்வு முடிவுற்ற 13 வேலை நாட்களில் விரைவாக 01.04.2025 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2024-ம் ஆண்டு தெரிவுப்பணிகள் நிறைவுற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி IIIA பணிகளின் தேர்வு ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் தேர்வு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை மற்றும் பொதுப்பணித் தேர்வுக்கான 4 பணிகளின் தேர்வு ஆகியவற்றிற்கான தேர்வுகளுடைய விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கலந்தாய்விற்கு ஒவ்வாரு ஒவ்வொரு பணிக்கான காலியிடங்களின் விவரங்களை தேர்வர்கள் நேரடியாக தேர்வாணையத்தின் Youtube சேனல் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி 03.02.2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்
ஒருமுறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, UPI மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
காலிப்பணியிட விவரங்களை இணையவழியாக பெறும் முறை அறிமுகம்
அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், மற்றும் சட்டபூர்வ ஆணையங்களில் இருந்து பல்வேறு தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிட விவரங்களை இணையவழியாக பெறும் முறையை தேர்வாணையம் 01.03.2025 முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
தேர்வர்களின் பெற்றோர்களுக்கான காத்திருப்புக் கூடம்
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்)-ல் கலந்தாய்விற்கு தேர்வர்களுடன் வரும் தேர்வர்களின் பெற்றோர்கள் அமரும் வகையில், காத்திருப்புக்கூடம் தேர்வாணைய அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தால் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தவிர்க்க இயலாத காரணங்களால் வரமுடியாத தேர்வர்களது பெற்றோர்/கணவர் /உறவினர் ஆகியோரில் எவரேனும் ஒருவரை, கலந்தாய்விற்கு அனுமதிக்கும் நடைமுறை 22.01.2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்
அரசுத்துறைகளின் தேவைக்கேற்பவும், தொழில்நுழை முன்னேற்றங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கவும். ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகளில் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 57 பாடத்தாள்களுக்கான (subject papers) பாடத்திட்டங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தெரிவு அட்டவணை (selection schedule)
தெரிவு அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வின் அடுத்த நிலை தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம் தெரிவு அட்டவணையில் குறிப்பிடப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி -1 மற்றும் 1B பணிகள், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாதவை), கருத்தியல் பணிகள் ஒருங்கிணைந்த தொழிற்பயிற்சி நிலையம்) ஆகிய தேர்வுகளின் முடிவுகள், தெரிவு அட்டவணையில் குறிப்பிட்டத் தவணையில் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்களுக்குத் தகவல்களை வழங்குதல்
தேர்வுகள் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ ஊடகத் தளங்கள் 14.02.2025 முதல் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வெளியீடுகள், திரைகள், பெட்டிகள், சுற்றறிக்கைகள், பதிவிறக்கப்படியங்கள், நியமன அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் தேர்வாணையத்தின் X தளம், டெலிகிராம் மற்றும் வலைதளப் பக்கங்கள் மூலமாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

