மேலும் அறிய

அரசின் அசத்தல் திட்டம்; விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டுமா... ? உடனே இதை APPLY பண்ணுங்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் 21.03.2025 முதல் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது

விழுப்புரம்: கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விண்ணபிக்கலாம்

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி தங்கும் இட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இச்சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் 21.03.2025 முதல் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் 06.04.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகளத் தகவல் தொடர்பு மைய அலைபேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ/மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகின்ற 08.04.2025 அன்று காலை 7.00 மணியளவில் கூடைப்பந்து(மாணவி) கால்பந்து (மாணவி) குத்துசண்டை (மாணவ,மாணவி) ரக்பி (மாணவி) மற்றும் கைபந்து(மாணவ/மாணவி) ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை, 08.04.2025 காலை 7.00 மணிக்கும் தடகளம் (மாணவ/ மாணவி) ஜூடோ (மாணவ/ மாணவி) வாள் விளையாட்டு (மாணவ/ மாணவி) கையுந்து பந்து(மாணவ/ மாணவி) கால்பந்து (மாணவ/ மாணவி) பளுதூக்குதல் மாணவ/ மாணவி) ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை, 08.04.2025 காலை 7.00 மணிக்கும், ஹாக்கி (மாணவ/மாணவி) MRK ஹாக்கி அரங்கம், மற்றும் கபடி (மாணவ/ மாணவி) நேரு பார்க், சென்னை 08.04.2025 காலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேற்காணும் விவரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுஞ்செய்தி வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விளையாட்டுத் தகுதிகள்:

01.01.2025 அன்று 17 (பதினேழு) வயது நிரம்பிய (பன்னிரண்டாம்) 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரிகளில் இளங்கலை முதலாமாண்டு சேர்க்கை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு சேர்க்கை சேர விரும்பும் மாணவ/மாணவியர் தகுதியுடையவர் ஆவர்.

தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்றவர்களும் மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

மேலும் 2025-2026 ஆம் ஆண்டிற்கு சிறப்புநிலை விளையாட்டு விடுதியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ/மாணவியர்கள் பயன்பெரும் வகையில் இது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தொலை பேசியிலோ 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Embed widget