மேலும் அறிய
Samantha Temple: கடவுளான மாறிய சமந்தா; கோயில் கட்டி பூஜை பண்ணும் ரசிகர்; எங்கு தெரியுமா?
ஆந்திரா மாநிலம் தெனாலியில் பக்தர் ஒருவர் நடிகை சமந்தாவிற்கு மார்பளவு சிலை ஒன்றை நிறுவி கோயிலாக கட்டி வழிபாடு செய்து வருகிறார்.
சமந்தாவுக்கு கோவில் கட்டி வழிபடும் ரசிகர்கள்
1/6

பொதுவாக பிரபலங்களை ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைப்பது உண்டு. அவர்களது படங்கள் வெளியாகும் போது பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது என்று ரசிகர்கள் செய்யும் அளப்பறைக்கு அளவே இருக்காது. அதுமட்டுமின்றி அவர்களது பேனர், கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்து அவர்களின் படங்களை கொண்டாடுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களை டாட்டூவாக போட்டுக் கொள்வார்கள்.
2/6

இப்படியும் சில ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஒரு சில ரசிகர் சற்று வித்தியாசமாக நடிகைக்கு கோயில் எழுப்பி வழிபட துவங்கி விடுகிறார்கள். ஏற்கனவே குஷ்பு, ஹன்சிகா மற்றும் நமீதாவிற்கு ரசிகர்கள் கோயில் எழுப்பி கடவுளாக வழிபடும் நிலையில், இப்போது சமந்தாவிற்கும் கோயில் கட்டப்பட்டுள்ளது.
Published at : 02 Apr 2025 10:47 PM (IST)
மேலும் படிக்க





















