மேலும் அறிய
Love Movie Review : படத்தின் பெயர்தான் லவ்.. உள்ளே ரணகளம்.. எப்படி இருக்கு பரத் - வாணி போஜன் காம்போ?
Love Movie Review : குடும்பத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடங்கி, வீட்டுக்கு வீடு பிரச்சினை எப்படி மாறுகிறது மாறுகிறது என சொன்ன விதம் கவனிக்க வைக்கிறது.

லவ் திரைப்பட விமர்சனம்
1/6

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ். இந்தப் படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, பிக் பாஸ் டானி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ள அதன் விமர்சனத்தை இங்கு காணலாம்.
2/6

படத்தின் கதை : தம்பதிகளான பரத் - வாணிபோஜன் இடையே ஒரு நிகழ்வில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகிறது. இதில் பரத்தின் கோபத்தினால் வாணிபோஜன் கொல்லப்படுகிறார். பரத்தின் நண்பர்களான விவேக் பிரசன்னா, பிக்பாஸ் டேனியும் ஆகியோர் வருகிறார். நடுவே வாணிபோஜனின் அப்பா ராதாரவியும் வந்து செல்கிறார்.
3/6

ஒரு சந்தர்ப்பத்தில் விவேக் பிரசன்னா, டேனி இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது. பின் இறந்து போன வாணி போஜன் உயிருடன் இவர்களின் முன்பு வந்து நிற்கிறார். இதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீத கதை.
4/6

பரத் உடல் எடையை கூட்டி, அழகாக காட்சியளிக்கிறார். இவரும் வாணிபோஜனும் அசல் கணவன் - மனைவி சண்டையை கண் முன்னால் நிறுத்துகிறார்கள். அதிலும் வாணிபோஜன் இறந்துப் போன நிமிடத்திலும் அழகான கண் சிமிட்டா பொம்மையாக காட்சியளிக்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் பாசமிகு தந்தையாக ராதாரவி கேரக்டர் சிறப்பு.
5/6

குடும்பத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடங்கி, வீட்டுக்கு வீடு பிரச்சினை எப்படி மாறுகிறது மாறுகிறது என சொன்ன விதம் கவனிக்க வைக்கிறது.
6/6

அரைமணி நேரம் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தி, அதனை தொடர்ச்சியாக கொண்டு செல்லாமல் சொதப்பியுள்ளார்கள். இதேபோல் பிற்பாதியில் வாணி போஜன் மீண்டும் வரும்போது கதை சூடுபிடிக்கும் என எதிர்பார்த்தால் கடைசியில் இதுக்கெல்லாம் என்ன காரணம் என எளிதாக எண்ட் கார்டு போடுவது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆக மொத்தத்தில் படத்தின் பெயர் தான் லவ்.. ஆனால் உள்ளே ரணகளம்...!
Published at : 27 Jul 2023 11:46 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement