மேலும் அறிய
March 1 Movie Releases : மார்ச் மாத தொடக்கமே அசத்தல் தான்! நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?
March 1 movie release : நாளை (மார்ச் 1) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் இதோ..

மார்ச் 1 ரிலீஸ்
1/7

ஜோஸ்வா இமைபோல் காக்க: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதுமுகம் வருண், ராஹேய், கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது.
2/7

போர் : பிஜாய் நம்பியார் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த அதிரடி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
3/7

சத்தமின்றி முத்தம் தா : ராஜூ தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திமேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது.
4/7

அதோமுகம் : இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் எஸ் பி சித்தார்த், சைதன்யா பிரதாப், சரித்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
5/7

ஆபரேஷன் வேலண்டைன் (தெலுங்கு) : இந்தியாவின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் வருண் தேஜ். மனுஷி சில்லர், நவ்தீப், மீர் சர்வார் உள்ளிட்டோரின் நடிப்பில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகிறது.
6/7

Dune :பார்ட் 2 (ஆங்கிலம்) டெனிஸ் வில்லெனுவ் இயக்கத்தில் திமோத்தி சலாமெட், ஜெண்டயா, ரெபேக்கா, பெர்குசன், ஜோஷ், ப்ரோலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.
7/7

சாமி (ரீ ரிலீஸ்) : ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா, விவேக் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அதிரடி திரைப்படம் 'சாமி' நாளை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
Published at : 29 Feb 2024 01:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion