மேலும் அறிய
உன்னுடைய அன்பும் - அரவணைப்பும் இல்லை! 3-ஆவது திருமண நாளில் கலங்க வைத்த ஸ்ருதி சண்முகப்பிரியாபதிவு!
மூன்றாவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கணவரை நினைத்து உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
நடிகை சீரியல் நடிகை சண்முகப்பிரியாவின் கலங்க வைக்கும் பதிவு
1/9

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
2/9

அதன் பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா, பொம்முகுட்டி அம்மாவுக்கு என்று பல சீரியல்களில் நடித்தார்.
3/9

அதுமட்டுமின்றி பல பாடல்களுக்கும் ரீல்ஸூம் போட்டு பிரபலமானவர். சீரியலில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே ஸ்ருதி சண்முகப்பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி சிவில் இன்ஜினியரான அரவிந்த் சேகரை திருமணம் செய்து கொண்டார்.
4/9

ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை முழுமையாக 2 ஆண்டுகளை கூட நிலைக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
5/9

இந்த நிலையில் தான் ஸ்ருதி சண்முகப்பிரியா இன்று தனது 3-ஆம் ஆண்டு திருமண நாளை நினைவு கூறும் விதமாக சோஷியல் மீடியாவில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
6/9

அதில், இனிய 3ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அரவிந்த் சேகர். நீ என்னருகில் இல்லாததை நான் இன்று உணர்கிறேன். ஆனால், நாம் இருவரும் உருவாக்கிய நினைவுகளுடன் நம் உலகத்தில் வாழ்கிறேன். உன்னுடைய அன்பும், அரவணைப்பும் இன்று எனக்கு இல்லை.
7/9

நீ வாங்கிக்கொடுக்கும் பூவை மிஸ் பண்ணுகிறேன் என் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
8/9

3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நமது எதிர்காலம் குறித்து ஏராளமான கனவுகளுடனும், கற்பனைகளுடனும் நாம் நமது வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
9/9

ஆனால், இன்று நீ கற்று கொடுத்த அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் கொண்டு ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைக்கிறேன். எப்போதும் உன்னுடைய மனைவியாகவே இருப்பேன். உன்னுடைய ஸ்ருதி அரவிந்தன் என்று என்று பதிவிட்டுள்ளார்.
Published at : 27 May 2025 09:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















