மேலும் அறிய
Parvati Nair: நடிகை பார்வதி நாயர் ஹனி மூனுக்கு எங்க போய் இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!
நடிகை பார்வதி நாயர் கணவருடன் ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், மாலத்தீவில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்வதி நாயரின் ஹனி மூன் போட்டோஸ்
1/8

ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் பிறந்து வளர்த்தவர் பார்வதி. இவர் மலையாளி குடும்பத்தை சேர்ந்தவர்.
2/8

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சாப்ட்வேர் நிபுணராக பணியாற்றி வந்தார். மேலும் 15 வயதாக இருக்கும் போதே மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார்.
3/8

2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஸ்டோரி கதே என்ற கன்னட படத்தில் நடித்தார். அப்போது தான் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிமிர்ந்து நில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
4/8

இந்தப் படத்திற்கு பிறகு அஜித், அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
5/8

இந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கமல் ஹாசனின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி, கோட் என்று பல படங்களில் நடித்தார்.
6/8

தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே தொழிலதிபரான அஷ்ரித் அசோக்கை திருமணம் செய்து கொண்டார்.
7/8

கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தான் இப்போது பார்வதி நாயர் மற்றும் அஷ்ரித் அசோக் இருவரும் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளனர்.
8/8

அங்கு பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
Published at : 01 May 2025 10:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















