அசத்தினார் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.,: சொந்த செலவில் டிராபிக் போலீசாருக்கு விலை உயர்ந்த கூலிங்கிளாஸ்
மாவட்ட எஸ்.பி., ராஜா ராம் தனது சொந்த செலவில் போக்குவரத்து பிரிவு போலீசார் 25 பேருக்கு விலை உயர்ந்த குளிர் கண்ணாடிகளை வழங்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு முதல்வர் வருகையின்போது சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து காவல் பிரிவு போலீசார் 25 பேருக்கு மாவட்ட எஸ்பி ராஜாராம் தனது சொந்த செலவில் விலை உயர்ந்த குளிர் கண்ணாடிகள் வழங்கினார்.
தஞ்சாவூருக்கு கடந்த ஜூன் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்தார். கல்லணை திறப்பு, ரோடு ஷோ உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதல்வர் வருகையை ஒட்டி தஞ்சை மாநகர் முழுவதும் போக்குவரத்து சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகளில் போக்குவரத்து பிரிவு போலீசார் சிறப்பாக பணியாற்றினார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ராஜா ராம் தனது சொந்த செலவில் போக்குவரத்து பிரிவு போலீசார் 25 பேருக்கு விலை உயர்ந்த குளிர் கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பின்னர் எஸ் பி ராஜாராமன் கூறியதாவது: போக்குவரத்து விதிகளை அமலாக்கப் செய்கின்ற காவலர்கள் எத்தகைய நிலையிலும் தங்களுடைய சிரமங்களின் காரணமாக அதிகமான மன அழுத்தத்திற்கு ஆழாக கூடாது இதமான நிலையில் இருந்து பணிகள் செய்யும்போதுதான் அவங்களுடைய சேவைகள் சிறப்பாக அமையும் என்ற காரணத்தினால் கோடைகாலத்தில் சூரியனுடைய வெப்ப கதிர்களில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக இந்த கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் அவர்களுக்கு திரும்பத் திரும்ப மீண்டும் சொல்வது பொதுமக்களுடன் பணி செய்யும்போது கனிவான வார்த்தை, உறுதியான அமலாக்கம் என்ற முழக்கத்தோடு இதமான பணிகளை செய்ய வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தஞ்சை மாநகர பகுதியில் காவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது தஞ்சாவூரில் வழங்கப்பட்டது போல் அடுத்த கட்டமாக பட்டுக்கோட்டையிலும் போக்குவரத்து போலீசாரத்தில் குளிர் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் நிழற்குடை இல்லாத பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நிழற்குடை அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து போலீசார் சாலையில் வாகனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து விதிகளை அமல்படுத்துதல், விபத்துகளைக் கையாளுதல் மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். இவர்கள் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதைக் குறைக்கவும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். பண்டிகைகள், விழாக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது, போக்குவரத்தைச் சீராக இயக்குவதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து போலீசார் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். இவ்வாறு நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் அவர்களின் உடல்நலனை கவனத்தில் ொள்ள வேண்டும் என்பதற்காகவும் மாவட்ட எஸ்.பி., ராஜாராம் இவ்வாறு செய்துள்ளார்.





















