மேலும் அறிய
Sneha and Prasanna Photos: 43 வயசிலும் தகதகவென மின்னும் சினேகா! மணமகள் கெட்டப்பில் கணவர் பிரசன்னாவுடன் நடத்திய போட்டோ ஷூட்!
Sneha and Prasanna Photos: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாடலாக கலந்து கொண்ட, நடிகை சினேகா மற்றும் பிரசன்னா ஜோடியின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான லைக்குகளை பெற்று வருகிறது.

நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்
1/6

90'ஸ் ரசிகர்களின் கனவை ஆர்கொண்ட நாயகிகளில் ஒருவர் தான் சினேகா. தமிழ் திரையுலகில் எத்தனையோ ஹீரோயின்கள் வந்தபோதிலும், ஒரு சில நடிகைகளை மட்டும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த லிஸ்டில் உள்ளவர் தான் நடிகை சினேகா.
2/6

மலையாள சினிமாவில் இவரின் அறிமுகம் இருந்தாலும், இவரை முன்னணி நடிகையாக மாற்றியது தமிழ் படங்கள் தான். என்னவளே படத்தில் தொடங்கி, கடைசியாக வெளியான கோட் படம் வரைக்கும் இவரின் நடிப்பு மிகவும் எதார்த்தமானதாக இருக்கும்.
3/6

திருமணம் ஆன பின்னர் சில நடிகைகள் திரையுலகை விட்டே ஒதுங்கி விடும் நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கூட, தன்னுடைய கணவரின் அனுமதியோடு வெயிட்டான ரோல்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் சினேகா.
4/6

அதற்க்கு மிகப்பெரிய உதாரணம் தான் கடைசியாக வெளியான கோட். ஏற்கனவே விஜய்க்கு அண்ணியாக நடிக்கக்கோரி வாரிசு படத்தில் வாய்ப்பு வந்தபோது... எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என மறுத்தார். அன்று அந்த வாய்ப்பை மறுத்ததால் தான், கோட் படத்தில் தளபதியுடன் 43 வயதிலும் ஜோடி போட்டு நடித்தார்.
5/6

சினிமாவை தவிர, சின்னத்திரை மற்றும் பிஸ்னஸ் வுமனாகவும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நடிகை சினேகா, தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் அண்மையில் ஒரு மாடலிங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் சாரியில் தகதகவென மின்னினார்.
6/6

பிரசன்னா வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் அவர் அணிந்திருந்த உடை ஒரு ராஜாவை போல தோற்றமளிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் சினேகா - பிரசன்னா ஜோடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 08 Dec 2024 09:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion