மேலும் அறிய

காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஆர்சிபி வீரர் யஷ் தயாள் திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும்  இளம்பெண் ஒருவர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்-க்கு புகார் அளித்திருந்தார். திருமணம் செய்வதாக மட்டுமின்றி, பல பெண்களுடனும் அவர் தொடர்பில் இருப்பதாக கூறியிருக்கும் குற்றச்சாட்டு ரசிகர்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் அவர் மீது ஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடாத யஷ் தயாள், ஐபிஎல் போட்டிகளில் 43 போட்டிகளில் ஆடி 41 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் யஷ் தயாள் அந்த அணியின் ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளரான இவர் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில், ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இவர் மீது இளம்பெண்ணை ஏமாற்றிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்மாநில முதலமைச்சருக்கு இணையதளம் மூலமாக யஷ் தயாள் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். அந்த  புகாரில், யஷ் தயாள் தன்னை 5 ஆண்டுகள் என்னை காதலித்தார் என்றும்,  அவரது குடும்பத்தினரிடம் தன்னை அவர்களது மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், தன்னிடம் ஒரு கணவன் போலவே நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த 5 ஆண்டுகள் பழக்கத்தின்போது தன்னிடம் இருந்து ஏராளமான பணம் வாங்கியதாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து கூறி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புகாருக்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் யஷ் தயாளுடனான குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட், வீடியோ கால் ரெக்கார்ட்ஸ், புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுமட்டுமின்றி, யஷ் தயாள் பல பெண்களுடன் இதுபோன்று தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கடந்த 14ம் தேதியே அவர் மகளிர் உதவிமையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

யஷ் தயாள் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு அந்த மாநில முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மீது ஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்சிபி அணியின் டெத் பவுலராக பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்த யஷ் தயாள் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை ஏமாற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் அவரை இணையதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். திருமணம் செய்வதாக மட்டுமின்றி, பல பெண்களுடனும் அவர் தொடர்பில் இருப்பதாக கூறியிருக்கும் குற்றச்சாட்டு ரசிகர்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
IND vs WI: ரோகித் பவர் ஹிட்டிங்.. கே.எல்.ராகுல் காட்டடி..! 352 ரன்களை எட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: ரோகித் பவர் ஹிட்டிங்.. கே.எல்.ராகுல் காட்டடி..! 352 ரன்களை எட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget