மேலும் அறிய
Cinema News : ஒரே நாளில் இத்தனை அப்டேட்களா? இன்று மாலை வரை காத்திருங்க!
Cinema News : வேட்டையன், சூர்யா 44, கூலி உள்ளிட்ட படங்கள் குறித்த சூப்பரான அப்டேட்கள் வந்துள்ளன.

சினிமா செய்திகள்
1/5

டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ஷூட்டிங் இன்று முடிவடைந்துள்ளது என படக்குழு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
2/5

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள லப்பர் பந்து படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 .15 மணிக்கு வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
3/5

ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் கூலி. இப்படத்தில் யாரெல்லாம் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற விபரங்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
4/5

சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். ஊட்டியில் நடந்த படப்பிடிப்பில் கமர்ஷியல் பாடல் ஒன்று படம்பிடிக்கப்பட்டதாகவும் அதில் சூர்யாவுடன் நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
5/5

எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராரி. இப்படத்தின் டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published at : 28 Aug 2024 01:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
நிதி மேலாண்மை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion