சென்னைக்கு அருகே உள்ள அழகிய தீவுகள்.. பட்ஜெட் ட்ரிப் போறவங்க நோட் பண்ணிக்கோங்க..!
Chennai Near Islands: சென்னையில் இருந்து ஒரு நாள் பயணமாக சென்று வர, அழகிய தீவுகள் பட்டியல்.

கோடைகாலம் தொடங்க உள்ளது, விரைவில் பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. வருடம் முழுவதும் உழைப்பவர்கள், கோடைகால விடுமுறையின்போது, ஒரு நாளாவது குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய விரும்புவது இயல்பு. சென்னையில் இருப்பவர்கள் சென்னைக்கு அருகே, இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களை குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னை அருகே இருக்கும் தீவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பிளமிங்கோ தீவு
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. தடா பகுதியில், தடா நீர்வீழ்ச்சிக்கு அருகில் இந்த தீவு உள்ளது. தடாவிலிருந்து, இந்த தீவிற்கு படகுமூலம் செல்ல முடியும். கடல் உணவு பிடித்தவர்கள் இந்த தீவுக்கு விசிட் அடித்து விட்டு வரலாம்.
கடல் உணவுகளை சமைத்து தர, அப்பகுதியில் மீனவர்கள் நிறைய உள்ளனர். படகில் அழைத்துச் சென்று தீவில் மதிய உணவு செய்து தரப்படுகிறது. சென்னை அருகே இருக்கும் அழகிய தீவுகளில் இதுவும் ஒன்று.
காட்டுப்பள்ளி தீவு
காட்டுப்பள்ளி தீவில் கப்பல் கட்டும் தளம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவில் அதிகளவு தென்னம் தோப்புகள் இருப்பது சிறப்பு அம்சம். குடும்பத்துடன் சென்று ஒரு நாள் நேரத்துக்கு செலவிட, மிகவும் பாதுகாப்பான தீவாக இருந்து வருகிறது.
இருக்கம் தீவு - Hidden Island
சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. புலிகாட் ஏரி நடுவே இந்த தீவு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் இந்த தீவிற்கு ஹிடன் ஐலேண்ட் என்ற பெயர் உள்ளது. மிகவும் கொள்ளை அழகு கொண்ட சுற்றுலா தலமாக இருக்கிறது.
திமிங்கல தீவு
திமிங்கலத் தீவு என்று பெயர் கேட்டவுடன் திமிங்கலம் இருக்கும் என்ற அச்சம் வேண்டாம். சென்னை அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திற்கு அருகே இந்த தீவு அமைந்துள்ளது.
ஆற்றில் நீரோட்டம் இருக்கும் போது போட் கிளப் சார்பில் போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கிருந்து பல புலம்பெயர் பறவைகளை பார்க்க முடியும்.
க்விபிள் தீவு - Quibble Island
சென்னையில் அமைந்திருக்கும் முக்கிய தீவுகளில் ஒன்றாக இது உள்ளது. மயிலாப்பூருக்கும் அடையாற்றுக்கும் அருகில் அமைந்துள்ளது. மெரினா கடற்கரையில் தெற்கு பகுதியை ஒட்டி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா கல்லறை ஒன்று அமைந்துள்ளது. மயிலாப்பூர் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் இருந்து செல்ல முடியும்.
ஆலம்பறை தீவு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், இடைக்கழி நாடு பகுதியில் ஆலம்பறை தீர்வு அமைந்துள்ளது. மூன்று புறத்திலும் தண்ணீரால் சூழப்பட்ட கோட்டை ஒன்று அமைந்துள்ளது. இக்கோட்டையின் பின்புறத்தில் ஆறு கடலில் கலக்கும் காட்சியை காண முடியும். வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதால், மிகவும் சிறப்பு வாய்ந்த தீவாக உள்ளது. குடும்பத்துடன் செலவிட இந்த தீவு மிக ஏற்ற தீவாக மற்றும் பாதுகாப்பான தீவாகவும் உள்ளது.
சென்னையில் உள்ள மால்கள், தியேட்டர்களில் சென்று பொழுது போக்குவதை விட, ஒரு நாள் பயணமாக இது போன்ற தீவுகளுக்கு சென்று வந்தால் புதிய அனுபவத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

