DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை என, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

DKS On Annamalai: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பதாக, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
”அண்ணாமலை முக்கியம் இல்லை”
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்த புரிதலும் இன்றி, திமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக, தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, கர்நாடகா திரும்பும் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ”இந்த விஷயத்தில் அண்ணாமலை முக்கியமான நபர் கிடையாது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நாட்டிற்கு என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம். அண்ணாமலைக்கு ஏதாவது தெரியுமா? அவர் தனது வேலையை மட்டுமே செய்கிறார். தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை.
திமுகவிற்கு வாழ்த்து
தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநிலங்களின் குரலை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். டொடர்ந்து நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்னையை எழுப்புவோம்.திமுக நல்ல முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது” என சிவக்குமார் தெரிவித்தார். முன்னதாக நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டுக் குழு கூட்டத்தில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தகக்து.
வார்த்தை மோதல்:
கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.இதுதொடர்பான கேள்விக்கு நேற்று பதிலளித்த டி.கே. சிவக்குமார், “பாஜக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதை , வரவேற்கிறேன். பாஜக , என்னை கைது செய்து , சிறையிலும் அடைத்திருந்தது, எனக்கு பயம் எல்லாம் இல்லை. இந்த ஆபிஸர் என அண்ணாமலையை குறிப்பிட்டு, இவர் எங்கள் மாநிலத்தின் காவல் துறையில் பணியாற்றினார். அவருக்கு , நாங்கள் யார் என்றும், எங்களை பற்றியும் தெரியும், எங்களின் பலம் குறித்து தெரியும். அவர் பாவம் ( Poor Man ) , அவரது வேலையை பார்க்கட்டும் விடுங்கள்” என தெரிவித்தார்.
இதையடுத்து அண்ணாமலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ஆம், நான் ஒரு காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்காக சேவை செய்தேன். குறிப்பிடத்தக்க வகையில் என்னை குறிப்பிட்டு பேசியதற்கு நன்றி. மேலும், இந்த ஏழை மனிதனுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி,கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை, அவரது நாற்காலியில் இருந்து அகற்றி , கர்நாடக முதல்வராகும் உங்களின் அயராத முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

