GT vs PBKS: என்ன மனுசன்யா... நீ அடி! எனக்கு சதம் வேண்டாம்.. ஸ்ரேயாஸ் சொன்ன அந்த வார்த்தை! பகிர்ந்த ஷஷாங்க்
GT vs PBKS: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 97 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

இறுதி ஒவருக்கு என் சதத்தை பற்றி கவலைப்படாதே நீ ரன் அடி என்று ஸ்ரேயாஸ் தன்னிடம் சொன்னதாக ஷஷாங்க் சிங் தெரிவித்தார்.
GT vs PBKS:
குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார், பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்கள் எடுத்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஸ்ரேயஸ் ஐயர் தனது அதிரடியை தொடர்ந்து அரைசதத்தை கடந்தார். அவருக்கு துணையாக ஸ்டோய்னிஸ் மற்றும் ஷஷாங்க் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். இவர்களின் அதிரடியால் பஞ்சாப் 243 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஐபிஎல்லில் தங்களது 2வது அதிகப்பட்ச ஸ்கோரை பஞ்சாப் அணி பதிவு செய்தது.
ஸ்ரேயாஸ் 97 ரன்கள்:
பஞ்சாப் இன்னிங்ஸ்சின் இறுதி ஓவரை ஷஷாங்க் சிங் ஆடினார், மறுப்புறம் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களுடன் நின்று கொண்டு இருந்தார், இதனால் ஷஷாங்க் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிங்கள் எடுத்து கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஷஷாங்க் சிங்கே ஒவரின் 6 பந்துகளையும் சந்தித்து கடைசி ஒவரில் 23 ரன்களை விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 97 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார், ஷஷாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
Final Flourish to Cherish, ft. Shashank Singh 😎 👊
— IndianPremierLeague (@IPL) March 25, 2025
Updates ▶ https://t.co/PYWUriwSzY#TATAIPL | #GTvPBKS pic.twitter.com/76Kw827ors
ஸ்ரேயாஸ் தான் சொன்னார்:
இன்னிங்ஸ் முடிந்ததும், ஷ்ரேயாஸ் ஐயர் ஷஷாங்கின் முதுகில் தட்டினார், தனது சதத்தை தவறவிட்டதில் எந்த ஏமாற்றத்தையும் காட்டவில்லை, அதன் பிறகு வர்ணனையாளர்களிடம் பேசிய ஷஷாங்க் இது ஒரு நல்ல கேமியோ. டக் அவுட்டிலிருந்து பார்க்கும் போது ஷ்ரேயாஸ் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. நான் உள்ளே சென்ற உடன் முதல் பந்திலிருந்தே ஷ்ரேயாஸ் என்னை அதற்கு அடிக்கும்படி கூறினார்.
Shashank Singh said "Shreyas Iyer told me from ball 1 that 'Don't look at my hundred' - Just play your shots, I am happy". pic.twitter.com/gFYM26YQCv
— Johns. (@CricCrazyJohns) March 25, 2025
கடைசி ஓவர் தொடங்குவதற்கு முன்பு என் சதத்தை பற்றி கவலைப்ப்டாதே நீ அடித்து ஆடு என்று ஸ்ரேயாஸ் என்னிடம் சொன்னார்.





















