மேலும் அறிய

25 கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் 25 கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் 25 கிராமங்களை எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.

25 கிராமங்களை இணப்பதற்கு நடவடிக்கை:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரங்கியூர், அரசூர், பெரியசெவலை, ஆனத்தூர், மடப்பட்டு, அரும்பட்டு, மாதம்பட்டு உள்ளிட்ட 25 கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை  அரசு மேற்கொண்டு வருகிறது.

விழுப்புரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மட்டும் இருந்து வரும் இந்த 25 கிராமங்களை 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் இணைக்கப்பட்டால் அரசு அலுவலகங்களுக்கு செல்லவும், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை பெறுவதற்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதோடு காலம், நேரம் விரயம் ஆகும் எனக் கூறி 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 25 ஊராட்சி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தற்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இதுகுறித்து பெரியசெவலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் கூறுகையில், “அரசூர் திருவெண்ணைநல்லூர் குரு வட்டங்களை சேர்ந்த 25 கிராமங்கள் தற்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இது மக்கள் அனுமதி பெற்று விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட கிராமங்கள். தற்பொழுது அரசியல் சுயலாபத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று தெரிவித்தார். 

ஆட்சியரிடம் புகார் மனுவில்....

தமிழக சட்டமன்றத்தில் விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் கடந்த 2020ல் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பல கட்டமாக இரு மாவட்ட எல்லை பகுதி பொது மக்களின் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முறையாக தமிழக அரசு பரிசிலினை செய்து எல்லை வரையறை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரு மாவட்ட மக்களின் நலனுக்கு எதிராக தங்களின் சுய லாபம் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்காக சிறப்பாக செயல்பட்டு வரும் இரு மாவட்ட நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லைகளை மீண்டும் வரையறை செய்ய சில மக்கள் பிரதிநிதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். ஏற்கனவே பலகட்ட கருத்து கேட்பிற்கு பிறகு எல்லை வரையறை செய்த நிலையில் பொது மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் மீண்டும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் இரு மாவட்ட எல்லைகளை மாற்றும் முயற்சி மக்களுக்கு எதிர்பாகவும், மக்கள் நலனுக்கு விரோதமானதாகவும் உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget