மேலும் அறிய

செல்வமகள் முதல் தங்கமகன் திட்டம் வரை.. இந்திய அஞ்சலக வங்கியில் அசத்தல் சேவை!

இந்த செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிதான முறையில் ஆன்லைன் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

இந்திய அஞ்சலக வங்கியில் அசத்தல் சேவை:

தமிழ்நாட்டில் புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட கணக்குகள், முதியோர் உதவித்தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம் /உதவித்தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும்.

தொடக்க காலத்தில் தொடங்கப்பட்ட கணிசமான கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் மறைவிற்குப் பிறகு சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கு வகை செய்கிறது.

இதன்படி, அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்வதற்கு தேவையான வசதி மாநிலம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் உள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் கூகுள் பிளேஸ்டோர் மூலம் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மொபைல் செயலி மூலம் அவரவர்கள் வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.

செல்வமகள் முதல் தங்கமகன் திட்டம் வரை:

மேலும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி செயலி மற்றும் அஞ்சல்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைத்து அரசின் நேரடி மானிய உதவிகளையும் எளிதில் பெற முடியும். அதுமட்டுமின்றி, இந்த வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கையும் இணைத்து ஆன்லைன் வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிதான முறையில் ஆன்லைன் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும்  555 ரூபாய் மற்றும் 755 ரூபாய் என்ற குறைவான பீரிமியத் தொகையில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு பெறுவதற்கான வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபார கணக்கு மூலம் வர்த்தகர்கள் தங்களது கடைகளில் யுபிஐ குறியீடு மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஞ்சலகங்களில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு
"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget