மேலும் அறிய

Anwar Raajha: திமுகவில் ஐக்கியமான அன்வர் ராஜா.. முந்திக் கொண்ட எடப்பாடி - அதிமுக திடீர் அறிவிப்பு

ADMK Anwar Raajha: அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

ADMK Anwar Raajha: அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திமுகவில் அதிமுக அமைப்புச் செயலாளர்

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா (75 வயது), திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலை வருகை தந்தார். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவால், அதிருப்தி அடைந்து தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள அன்வர் ராஜா முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தெரிவிக்கின்றன. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அன்வர் ராஜா தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அண்மையில், தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது என இவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் சிறுபான்மை சமூகத்தின் முக்கிய தலைவராக கருதப்படும் அன்வர் ராஜா, அதிலிருந்து விலகுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்:

இதனிடையே, கட்சியின் அமைப்புச் செயலாளரான அன்வர் ராஜாவை கட்சியில் இருந்தே நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுப்பதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். முன்னதாக சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏற்கனவே அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். பின்பு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று செயல்பட விருப்பம் தெரிவித்து வருத்தம் தெரிவித்தால் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார். கன்னியாகுமரியை சேர்ந்த இவருக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாஜக கூட்டணியால் எழுந்த சர்ச்சையால் மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அன்வர் ராஜாவின் அரசியல் பயணம்:

அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த அன்வர் ராஜா மண்டபம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக 1986ம் ஆண்டு தொடங்கி 1991ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதன் விளைவாக ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்து, 2001ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டதுமே, அவருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து, 2014ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களை தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வானார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மன்றக் குழு, வெளியுறவு, சிறுபான்மை விவகாரங்கள் போன்ற பல்வேறு குழுக்களில் அன்வர் ராஜா இடம்பெற்று இருந்தார். கூடுதலாக, அவர் தமிழ்நாடு வக்ஃப் போரத் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கம்.. சேர்ப்பு.. நீக்கம்..

ஆரம்பம் முதலே அதிமுகவில் இருந்த அவர், கட்சி கொள்கைகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு நவம்பர் 30, 2021 அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் . தொடர்ந்து, ஆகஸ்ட் 4, 2023 அன்று, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் தான், திமுகவில் இணைய அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிலையில், உடனடியாக அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவில் இணைந்தால் சிறுபான்மை வாக்கு வங்கி வலுப்படும் எனவும், அது அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையில் வெளுக்கும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் வெளுக்கும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
IND Vs NZ 3rd T20: ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 3வது போட்டி, நியூசி., கம்பேக்?
IND Vs NZ 3rd T20: ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 3வது போட்டி, நியூசி., கம்பேக்?
ஓபிஎஸ்-க்கு பேரிடி! தர்மர் அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி.. பழனிசாமி பக்கம் சாய்ந்ததன் பின்னணி என்ன?
ஓபிஎஸ்-க்கு பேரிடி! தர்மர் அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி.. பழனிசாமி பக்கம் சாய்ந்ததன் பின்னணி என்ன?
Trump warns Canada: சீனா கூட போகாதீங்க! 100% வரி போடுவேன்.. கனடாவுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்
Trump warns Canada: சீனா கூட போகாதீங்க! 100% வரி போடுவேன்.. கனடாவுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்
ABP Premium

வீடியோ

MK Stalin vs Modi | டபுள் என்ஜின் vs டப்பா என்ஜின்! மோடியை விளாசிய ஸ்டாலின்! கோபமான தமிழிசை
Anbumani Mango symbol | அன்புமணிக்கு மாம்பழம்! சம்பவம் செய்த பாஜக! அப்செட்டில் ராமதாஸ் தரப்பு
”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் வெளுக்கும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் வெளுக்கும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
IND Vs NZ 3rd T20: ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 3வது போட்டி, நியூசி., கம்பேக்?
IND Vs NZ 3rd T20: ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 3வது போட்டி, நியூசி., கம்பேக்?
ஓபிஎஸ்-க்கு பேரிடி! தர்மர் அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி.. பழனிசாமி பக்கம் சாய்ந்ததன் பின்னணி என்ன?
ஓபிஎஸ்-க்கு பேரிடி! தர்மர் அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி.. பழனிசாமி பக்கம் சாய்ந்ததன் பின்னணி என்ன?
Trump warns Canada: சீனா கூட போகாதீங்க! 100% வரி போடுவேன்.. கனடாவுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்
Trump warns Canada: சீனா கூட போகாதீங்க! 100% வரி போடுவேன்.. கனடாவுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்
முக்கிய அறிவிப்பு ஜனவரி 27-ல் வேலை நிறுத்தம்; வங்கிகள் 3 நாட்கள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்?
முக்கிய அறிவிப்பு ஜனவரி 27-ல் வேலை நிறுத்தம்; வங்கிகள் 3 நாட்கள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்?
‘’நான் டாக்டர் ஆகியே தீரணும்’’ சொந்த காலையே வெட்டிக்கொண்ட இளைஞர்- வெளியான ஷாக் காரணம்!
‘’நான் டாக்டர் ஆகியே தீரணும்’’ சொந்த காலையே வெட்டிக்கொண்ட இளைஞர்- வெளியான ஷாக் காரணம்!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மீனவர்களுக்கான எச்சரிக்கை!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மீனவர்களுக்கான எச்சரிக்கை!
Maruti S-Presso sales : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அடியோடு மாறிய மாருதி S-Presso-வின் ஜாதகம்! முழு விவரம்.
Maruti S-Presso sales : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அடியோடு மாறிய மாருதி S-Presso-வின் ஜாதகம்! முழு விவரம்.
Embed widget