மேலும் அறிய

சூடு பிடிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் - சீர்காழி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் யார் தெரியுமா? - இதோ விபரம்...!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறித்துள்ளது அக்கட்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகள் பங்கேற்று, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர்களை அணுகும் யுக்திகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். 

2026 சட்டமன்றத் தேர்தல் 

தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும், தேர்தலை எதிர்கெள்ள தயாராகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி தலைவர் மாநில முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலை சந்திக்க ஆயத்தம் ஆகி அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது‌.


சூடு பிடிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் - சீர்காழி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் யார் தெரியுமா? - இதோ விபரம்...!

நாதக வேட்பாளர் அறிமுகம் 

அதன் ஒரு நிகழ்வாக சீர்காழி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அம்பேத்ராஜன் அதிகாரப்பூர்வமாக அக்கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான அறிமுக கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காசிராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழன் காளிதாசன், மற்றும் குருதிக் கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அரிமா நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் திரளாகக் கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

முன்னாள் எம்பி

கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அம்பேத்ராஜன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டார். அம்பேத்ராஜன், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் என்பதால், அவரது அரசியல் அனுபவம் இந்தத் தேர்தலில் கட்சிக்கு ஒரு பலமாக அமையும் என செல்லப்படுகிறது. அவரின் அறிமுகத்தை தொடர்ந்து கட்சியின் மாநில நிர்வாகிகள், அம்பேத்ராஜனை வாழ்த்தி, அவருக்கு உறுதுணையாகச் செயல்படுவோம் என்று தெரிவித்தனர்.


சூடு பிடிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் - சீர்காழி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் யார் தெரியுமா? - இதோ விபரம்...!

தேர்தல் யுக்திகள் மற்றும் கொள்கை பரப்பு

வேட்பாளர் அறிமுகத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் யுக்திகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தனித்துவமான தேர்தல் அணுகுமுறை குறித்து நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். குறிப்பாக, வாக்காளர்களுக்குப் பணம் அளிக்காமல், கட்சியின் கொள்கைகளையும், லட்சியங்களையும் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

 

மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழன் காளிதாசன் பேசுகையில், "நாம் தமிழர் கட்சி எப்போதும் நேர்மையான அரசியலை முன்னெடுத்து வருகிறது. பணம் கொடுத்து வாக்குகளைப் பெறும் கலாச்சாரத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. நமது கட்சியின் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் நேரடியாக மக்களைச் சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் விளக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேளாண்மை வளர்ச்சி, தமிழ் மொழி வளர்ச்சி போன்ற நமது அடிப்படைக் கொள்கைகளை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


சூடு பிடிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் - சீர்காழி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் யார் தெரியுமா? - இதோ விபரம்...!

மேலும், வாக்காளர்களிடம் வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளிக்காமல், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காகச் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீர்வளம், ஊரக வளர்ச்சி போன்ற துறைகளில் நாம் தமிழர் கட்சியின் தொலைநோக்குத் திட்டங்கள் என்னென்ன என்பதைப் பொதுமக்களிடம் தெளிவுபடுத்தி, அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுவே, பணமில்லா அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி தேடித்தரும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உறுதிமொழி ஏற்பு 

கூட்டத்தின் தொடக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் இலட்சியங்களை வென்றெடுக்கவும், தேர்தலில் முழுவீச்சில் செயல்படவும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில், மாநிலத் துணைச் செயலாளர் சுந்தரகுமார், மீனவர் அணி மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், தவக்குமார், கார்ல்மார்க்ஸ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


சூடு பிடிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் - சீர்காழி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் யார் தெரியுமா? - இதோ விபரம்...!

இந்தக் கூட்டம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை நாம் தமிழர் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது என்பதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்தது. வேட்பாளர் அறிமுகம், தேர்தல் யுக்திகள் குறித்த விவாதம், மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதால், சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒரு வலுவான போட்டியாளராக களமிறங்கும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்‌ 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget