மேலும் அறிய

தேர்தல் நடக்கும் போது வருவது! எட்டி பார்ப்பது!! சீட்டு கேட்பது!!! காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது - அமைச்சர் ராஜகண்ணப்பன்

புதுச்சேரி: தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது!. சீட்டு கேட்பது! காங்கிரஸ் கட்சி பற்றி பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது என்று உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு தற்போது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி  மாநில தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-

இந்திய அளவில் உள்ள மாநிலங்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். திராவிட இயக்கத்தை கட்டி காக்க அவர் பின்னால் நாம் அணிவகுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இலவச பஸ், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான் புதுவையிலும் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம். புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சொல்வார். ஆனால் செய்ய மாட்டார். புதுவையில் நடக்கின்ற ஆட்சிக்கு ஒரு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை எந்த மலை வந்தாலும் முதலவர் மு.க.ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது.


தேர்தல் நடக்கும் போது வருவது! எட்டி பார்ப்பது!!  சீட்டு கேட்பது!!! காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது. தமிழக ஆளுநர் அவர் வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கு மத்திய அரசை கண்டு எந்த பயமும் இல்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. எதுவாக இருந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தமிழகம், புதுவையில் ஒரு காலமும் தாமரை மலராது. புதுவையிலும் தி.மு.க. ஆட்சி வர வேண்டும்.காங்கிரஸ் நம்முடன் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. கொஞ்சமாவது உழைக்க வேண்டும். ஈரோடு தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்தார்.

புதுவையில் திராவிட இயக்கத்தின் ஆட்சி விரைவில் அமையும். நாராயணசாமி கோபித்து கொள்ள கூடாது. சீட்டு வாங்க மட்டுமே காங்கிரஸ் கட்சியை நடத்து கின்றனர். அதனால் என்ன பிரயோசனம்? உழைக்கனும். மக்களுக்கு நல்லது செய்யனும். மக்களுக்காக கட்சி நடத்த வேண்டும். தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது!. சீட்டு கேட்பது. இதனால்தான் மக்கள் மத்தியில் காங்கிரஸ் எடுபடவில்லை. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது என அவர் பேசினார். தற்போது அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget