மேலும் அறிய

Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?

ஹெகுரு பயிற்சி குறித்து இந்தரஜா மற்றும் அவரது கணவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட வீடியோவில் சொன்ன தகவல்கள் உண்மையா.? தெரிந்து கொள்வோம்.

பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகளும், நடிகையும், யூடியூபருமான இந்தரஜா, அவரது கணவருடன் இணைந்து, சமீபத்தில் ஹெகுரு பயிற்சி குறித்து வெளியிட்ட காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், குழந்தைகளுக்கான வலது மூளை பயிற்சி குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு விளக்கமளித்து அவர்கள் மற்றொரு காணொளியை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறிய தகவல்களிலும் தவறுகள் உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

காணொளி குறித்து TN Fact Check வெளியிட்டுள்ள பதிவு

அந்த பதிவின் படி, ஹெகுரு பயிற்சி சர்ச்சை : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாகத் தவறான தகவலைப் பரப்பும் யூடியூப் தம்பதி ! என குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும், ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

தவறான தகவல் 1: ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது. 

இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும்  பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள “Early childhood stimulation” என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர். 

தவறான தகவல் 2: தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை. 

தவறான தகவல் 3: ஒன்றிய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. 
 
அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.     

தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது. 

இது திரிக்கப்பபட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது. 

மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது ‘JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION’ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் “RIGHT BRAIN EDUCATION” என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவுடன், அவர்கள் விளக்கமணித்த காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget