மேலும் அறிய

பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!

PCOD-ல் இன்சுலின் வேலை செய்யாமல் போவதால் பெரும்பாலும் 90% பெண்கள் உடல் பருமனுடன் இருப்பார்கள்.

PCOD எனும் பாலி சிஸ்டிக் ஓவரி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு குழந்தைப் பேறுக்காக காத்திருக்கும் பெண்களுக்கான விழிப்புணர்வுக் கட்டுரை இதோ!

இதுகுறித்து சிவகங்கை பொது நல மருத்துவர் Dr. ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:

''இன்றைக்கு பெண் மலட்டுத் தன்மையை உருவாக்கும் பிரச்சனைகளுள் முதலாக நிற்பது இந்த பிசிஓடிதான்.

பெண்களுக்கு மீசை, தாடி முளைக்கும் (HIRSUITISM)

பீரியட்ஸ் சரியாக வராது (IRREGULAR MENSTRUAL CYCLE)

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது ( INFERTILITY) ஆகியன ஒன்று சேர்ந்து இருக்கும்.

PCOD-ல் ஒரு பெண்ணின் உடல் எப்படி மாற்றம் அடைகிறது என்று பார்ப்போம்

ஒரு பெண்ணிற்கு அவளது கணையம் சுரக்கும் இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு "இன்சுலின் ரெசிஸ்டண்ஸ்" ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண்ணின் சினைப்பையில் இருந்து பெண்மையின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும்  ஆண்மையின் ஹார்மோனான ஆண்ட்ரோஜெனும் சுரக்கும்.

ஆனால் நார்மலாக இருக்கும் பெண்களில், அவரது ஓவரிகள் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன், இன்ஹிபின் (inhibin) எனும் பொருளால் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். PCOD இருக்கும் பெண்களில் அந்த இன்ஹிபின் சரியாக வேலை செய்யாது. அதற்கு பதிலாக ஏக்டிவின் (activin) எனும் பொருள் சுரந்து ஆண்மை ஹார்மோனை வீரியமிக்கதாக ஆக்கும்.

மேலும், PCOD-ல் இன்சுலின் வேலை செய்யாமல் போவதால் பெரும்பாலும் 90% பெண்கள் உடல் பருமனுடன் இருப்பார்கள்.

தோலுக்கு கீழ் கொழுப்பு

உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு தோலுக்கு கீழ் அனைத்து இடங்களிலும் கொழுப்பு படிந்திருக்கும். இந்த கொழுப்பை adipose tissue என்போம்.

உடலானது இந்த adipose tissue-களில் , ஆண்ட்ரோஸ்டெனிடயோன் எனும் ஹார்மோனை தொடர்ந்து ஈஸ்ட்ரோனாக (estrone) மாற்றிக்கொண்டே இருக்கும்.

இன்சுலின் வேலை செய்யாமல் இருப்பதால், கல்லீரல் இந்த ஹார்மோன்கள் இயங்கத் தேவையான புரதமான sex hormone binding globulin (SHBG) ஐ குறைவாக சுரக்கும்.

அதனால், அவரது ஓவரிகள் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் (free testosterone) மற்றும் அவரது கொழுப்பில் இருந்து வரும் ஈஸ்ட்ர டயால் (free estradiol) முதலிய ஹார்மோன்கள் ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றிக்கொண்டிருக்கும்.

தலை சொட்டைக்கு வாய்ப்பு

இந்த அதிகமான டெஸ்டோஸ்டிரோன்தான், PCOD உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போல மீசை, தாடி, அக்குள் பகுதிகளில் முடிகள் வளர காரணம். இந்த நிலை முற்றினால் தலை சொட்டை (androgenic alopecia) விழவும் வாய்ப்பு இருக்கிறது. ஆண்களுக்கு சொட்டை விழக் காரணமும் இந்த டெஸ்டோஸ்டிரான்தான்.

இப்படி ஹார்மோன் ரத்தத்தில் அதிகமாக இருப்பதால், அவரது மூளையில் உள்ள ஹைபோதலாமஸில் gonadotrophic releasing hormone(GnRH) அளவுகளை தாறுமாறாக கூட்டியும் குறைத்தும் சுரக்கும் .

GnRH அளவுகள் நிலையாக இல்லாமையால், அதன் விளைவாக பிட்சூயடரி சுரப்பியில் இருந்து Follicular stimulating hormone (FSH) அளவுகளை குறைவாக சுரக்க ஆரம்பித்து விடும்.

FSH இருந்தால்தானே, பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டைகள் வளர்ச்சி காண முடியும்.

FSH குறைவதால், கருமுட்டைகள் சரியாக வளர்ச்சி அடையாமல், பாதி வளர்ந்த நிலையிலேயே பல முட்டைகள் சினைப்பையில் காணப்படும்.

முட்டை வெளியேற்றம் தடை

FSH குறைந்ததை ஈடுகட்ட, அவரது மூளை, leutinising hormone(LH) ஐ அதிகமாக சுரக்கும். இந்த LH, தேவைக்கு மீறி அதிகமாக இருப்பதாலும், முட்டைகள் சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பதாலும், மாதவிடாயின் மத்தியில் நிகழ வேண்டிய சினைப்பையில் இருந்து முட்டை வெளியேற்றம் தடைபட்டு விடும் (ovulation won't occur )

முட்டை சரியாக வெளியேற இன்சுலினும் சரியாக வேலை செய்ய வேண்டும். அதுவும் பாதிக்கப்படுவதால், முட்டை வெளியேற்றம் முற்றிலும் நின்று விடுகிறது. (Anovulatory cycles)

தான் செய்ய வேண்டிய வேலை முட்டையை வெளியேற்றுதல். அதை செய்ய முடியாமல், சினைப்பையில் உள்ள THECA CELLS ஐ நன்றாக வளர்த்துவிடும். இந்த THECA செல்கள் , இன்னும் அதிகமான ஆண்மை ஹார்மோன்களை சுரக்கும். இது மேலும் பிரச்சனையை அதிகரிக்கிறது.

இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்

PCOD பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியாக மாதவிடாய் வராமல் இருப்பதற்கு காரணம் தெரிந்துவிட்டதா??

மாதவிடாய் சுழற்சியில், முட்டையே வெளியேறாமல் எப்படி கரு உருவாக முடியும்??

அதனால்தான்.. PCOD பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கின்றனர்.

இந்த பிரச்சனை அனைத்திற்கும் மூல காரணம் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்"

அதை சரிசெய்தால் , இந்த ஹார்மோன் குளறுபடிகள் அனைத்தும் படிப்படியாக சீராகிவிடும்.

உடல் பருமன் உள்ள பெண்களுக்கு, அவர்களது உடல் எடையை சரி செய்தால், இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் முழுமையாக குணமாகிவிடும்.

பெண்களில் உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் PCOD வருகிறது. இதை LEAN PCOD என்போம்.

இந்த LEAN PCOD மக்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டெண்சை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

100க்கு 90-க்கும் அதிகமான PCOD பெண்கள் எடை அதிகமானவர்களாகவே (obese PCOD) இருக்கின்றனர். 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே எடை சரியாக உள்ள பெண்களுக்கு lean PCOD வருகிறது.

முதலில் எடை அதிகமாக உள்ள PCOD பெண்களுக்கான டயட்.

இவர்கள் PCOD பிரச்சனைக்கு முழு முதல் தீர்வு - அவர்களது உயரத்துக்கு ஏற்ற எடைக்கு இறங்கச் செய்வதே தலையாய சிகிச்சை முறை. (http://humupd.oxfordjournals.org/content/10/3/267.full)

இன்சுலின் சுரப்பு

க்ளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) குறைவான காய்கறிகளையும், நல்ல கொழுப்புகளை உள்ளடக்கிய உணவுகளையும் உட்கொள்வதால் இன்சுலின் சுரப்பு குறைந்துவிடுகிறது.

அதனுடன் தேகப்பயிற்சியையும் மேற்கொள்ளும்போது உடல் எடை மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கிறது. எடை குறைய குறைய  இன்சுலின் சொல் பேச்சு கேட்க ஆரம்பிக்கும்.  (Reversal of insulin resistance)

இன்சுலின் நன்றாக வேலை செய்வதால், சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்சனை இருக்காது. (ovulation)

உடம்பு ஃபேட் பர்னிங் மோடிற்கு மாறிவிட்டதால், adipose tissue எனும் ஊளைச் சதை சேராது.

உள்ளுறுப்புகளில் சேர்ந்த கொழுப்பும் கரைக்கப்படும். ஆகவே தேவையில்லாமல் ஈஸ்ட்ரோன் உருவாகாது.

இவை போக, PCOD உள்ள பெண்களுக்கு மெட்ஃபார்மின் (metformin) மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது, இன்சுலினை வேலை செய்ய வைப்பதற்குத்தான்.

மெட்ஃபார்மின் பயன்பாடு

நீரிழிவு இருப்போருக்கும் இன்சுலினை வேலை செய்ய வைக்கவே மெட்ஃபார்மின் பயன்படுகிறது.

இரண்டு நோய்க்குமே காரணம் ஒன்றானதால், தீர்வும் ஒன்றாகி விட்டது.

உடல் எடை குறைத்தல் (reduction of weight)

இன்சுலின் அளவுகளை ரத்தத்தில் கட்டுக்குள் வைத்தல் ( to decrease the secretion of insulin)

ரத்தத்தில் இருக்கும் இன்சுலினை சரியாக வேலை செய்ய வைத்தல். (Insulin sensitivity)

இவைதான் இந்த இரு நோய்களையும் தீர்க்கும் தாரக மந்திரங்கள்.

எடை அதிகமாக இருக்கும் பெண்கள் எடை குறையுமட்டும்/ குழந்தைப்பேறு அடையுமட்டும் குறை மாவு, நிறை கொழுப்பு உணவு முறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

அதிக மாவுச்சத்துள்ளதும் இன்ஃப்லமேஷனை உருவாக்க வல்ல தானிய வகைகளை உடல் எடை குறையும் தருணத்தில் தவிர்த்து விடுதல் நல்லது.

ஜங்க் ஃபுட்ஸ், குளிர் பானங்கள் , எண்ணெயில் தீக்குளித்த உணவுகள் கட்டாயம் சாப்பிடக்கூடாது.

தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும்

மோனோ அன்சேச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள்( கறி, முட்டை, பால் பொருட்கள்) , ஒமேகா 3 கொழுப்பு அதிகம் ( மீன்கள்) உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும் .

காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் (nuts) போன்றவற்றை அதிகம் உண்ணவேண்டும்.

LEAN PCOD மக்களுக்கு

அவர்கள் தங்களது எடையை மெய்ன்டெய்ன் செய்ய தேவைக்கேற்ற மாவுச்சத்தை, கஞ்சி வடிகட்டப்பட்ட சாதம், பழங்கள், காய்கறிகள் , கீரைகளை அதிகமாக உண்டு பெற வேண்டும்.

நல்ல உடற்பயிற்சி தேவை

மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளும் எடுக்க வேண்டும். (எடை குறைவாக LEAN PCOD இருப்பவர்களுக்கு மெட்பார்மின் மாத்திரை குண்டாக இருப்பவர்களை விட நன்கு வேலை செய்யும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே சிகிச்சையில் மாத்திரையின் பங்கு மிக முக்கியமானது) (https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/15705302/)

இரு தரப்பினருக்குமே தினசரி விட்டமின் டி அளவுகள் சரியாக கிடைக்க வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு. விட்டமின் டி 3-க்கு எங்கும் அலைய வேண்டியதில்லை தினமும் மொட்டை மாடியில் சூரிய வெயிலில் 15 நிமிடம் நின்று பெற்று விடலாம். (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4669857/)

PCOD என்பது மிக எளிதாக சரிசெய்யக்கூடிய பெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் நோயாகும். தேவை நல்ல உணவு முறையும் சரியான சிகிச்சையும்தான் குறை மாவு உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வாழ்வியல் பிசிஓடிக்கான தீர்வை வழங்குகிறது''.

இவ்வாறு Dr. ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kettle Recipes: நூடுல்ஸ் முதல் சாதம் வரை.. அடுப்பே இல்லாமல் சமைப்பது எப்படி? முழு விவரம்
Kettle Recipes: நூடுல்ஸ் முதல் சாதம் வரை.. அடுப்பே இல்லாமல் சமைப்பது எப்படி? முழு விவரம்
Summer Health Tips: சருமப் பொலிவு முதல் நச்சு நீக்கம் வரை: கோடையில் 'வெள்ளரி தண்ணீர்' தரும் டாப் 6 நன்மைகள்!
Summer Health Tips: சருமப் பொலிவு முதல் நச்சு நீக்கம் வரை: கோடையில் 'வெள்ளரி தண்ணீர்' தரும் டாப் 6 நன்மைகள்!
Summer Spl Drink: சம்மர் ஸ்பெஷல்: நாவில் கரையும் குளு குளு 'பால் சர்பத்' செய்வது எப்படி?
Summer Spl Drink: சம்மர் ஸ்பெஷல்: நாவில் கரையும் குளு குளு 'பால் சர்பத்' செய்வது எப்படி?
Watermelon vs Muskmelon: தர்பூசணி vs கிர்ணி பழம்.. கோடைகாலத்தில் எது சிறந்தது?
Watermelon vs Muskmelon: தர்பூசணி vs கிர்ணி பழம்.. கோடைகாலத்தில் எது சிறந்தது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
Embed widget