EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது சுற்றுப்பயணத்தை கோவையில் ஏற்கனவே தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி, திமுக மக்களை நம்பாமல், அதன் கூட்டணியை நம்பியே உள்ளதாக விமர்சித்துள்ளார்.

கோவையில் நேற்று தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக அதன் கூட்டணியை நம்பி உள்ளதாகவும், தான் மக்களை நம்புவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
“அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது“
கோவையில் இன்று மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை கடுமையாக விமர்சித்தார். கோவை முழுவதும் அதிமுகவிற்கு எழுச்சி இருந்ததற்கான பிரதிபலனாக, அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை அப்பகுதிக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின்போது, வடக்கு கோவைக்கு 1100 கோடி ரூபாய் 3-வது குடிநீர் திட்டத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அதனை, உதயநிதி ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தார் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, பல பாலங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டதாகவும்,, அதனையும் திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்ததாகவும் விமர்சித்தார்.
“நீங்க கூட்டணிய நம்புறீங்க.. நான் மக்களை நம்புகிறேன்“
தொடர்ந்து பேசிய அவர், தற்போது திமுக கூட்டணியில் இரக்கும் கம்யூனி1ட் கட்சி, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா என்ற அளவிற்கு பின்னடைவை சந்தித்துள்ளதாக இபிஎஸ் கடுமையாக விமர்சித்தார்.
ஸ்டாலின், கூட்டணி பலமாக இருக்கிறது என்று கூறுகிறார், “நீங்க கூட்டணிய நம்புறீங்க, நான் மக்களை நம்புகிறேன்“ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். முத்தரசன் ஸ்டாலினுக்கு கூஜா தூக்குவதாக விமர்சித்த அவர், சிபிஎம் செயலாளரே ஜெயிக்க முடியாது என கூறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சியில் மக்களை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் சிந்திப்பது நல்ல என அவரை பாராட்டினார் எடப்பாடி பழனிசாமி. அதோடு, திமுக ஆட்சியில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை, இப்படியே போனால், தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பதை சண்முகம் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு, அதிமுக - பாஜக இணக்கமாக இல்லை என்று திருமா பேசுவதாகவும், அதை சொல்ல அவர் யார் என்றும் கேள்வி எழுப்பினார் இபிஎஸ். மேலும், உங்கள் கூட்டணியில் தான் மோதல் உள்ளது, கூட்டணி ஆட்சி என்பதை உள் மனதிற்குள் வைத்துக்கொண்டு, வெளியில் ஒன்று பேசுகிறார் திருமாவளவன் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“மக்களுக்கு ஒன்றும் செய்யாமல், ஸ்டாலின் எப்படி ஓட்டு கேட்பார்.?“
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சியில் எந்த புதிய திட்டத்தையாவது கொண்டு வந்திருக்கிறாரா என கேள்வி எழுப்பியதோடு, மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல், ஸ்டாலின் எவ்வாறு ஓட்டு கேட்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.
அவரது குடும்பத்தை பற்றி மட்டுமே அவர் கவலைப்படுவதாகவும், மக்களைப் பற்றிய கவலையா, மக்கள் நலன்களிலோ அவர் ஈடுபாடு காட்டவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.
திமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, குற்றச்செயல்கள், பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை மட்டுமே நடைபெற்று வருவதாக கூறிய அவர், பகிரங்கமாக நடக்கும் படுகொலைகளுக்கு திமுக அரசே காரணம் எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என ஸ்டாலின் கனவு கண்டுகெண்டிருப்பதாகவும், ஆனால், அதிமுக தான் 210 தொகுதிகளில் வெற்றி பெரும் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.






















