மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

“அடுத்த ரெய்டு அமைச்சர் சேகர் பாபு வீட்டில் தான்; இதற்கு இந்து வெறியர்தான் வேண்டும்” - ஹெச்.ராஜா

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கும், இந்துக்களுக்கும் விரோதமான , அராஜக ஆட்சி நடக்கிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்  இந்து முன்னனி கட்சி சார்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாகவும், இந்துக்களுக்கு  விரோதமாகவும் செயல்பட்டு வருவதாக கூறி திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமை தாங்கினார்.

பின்பு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், “திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு , மற்றும் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது. இது ஒரு பிரச்சனையா? என அமைச்சர் நேரு கூறி இருக்கிறார். என்ன முட்டாள்தனமான பேச்சு, திராவிடமாடல் ஆட்சி இந்து இயக்கத்திற்கும், தேசிய இயக்கத்திற்கும் விரோதமாக செயல்படுவது உறுதியாகி உள்ளது.

“அடுத்த ரெய்டு அமைச்சர் சேகர் பாபு வீட்டில் தான்; இதற்கு இந்து வெறியர்தான் வேண்டும்” - ஹெச்.ராஜா

மேலும் இந்துசமய அறநிலைத்துறைக்கு தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறியவேண்டும். தமிழ்நாட்டிற்கு இந்துசமய அறநிலைத்துறை வேண்டாம். அமைச்சர் சேகர்பாபு ஒரு கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தல் செய்பவர், அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும். தமிழகத்தில் அடுத்த அமலாக்கதுறை சோதனை சேகர் பாபு வீட்டில் தான் நடக்கும். இந்து அறநிலைதுறைக்கு இந்து வெறியர்கள் தான் அமைச்சராக இருக்க வேண்டும். 

“அடுத்த ரெய்டு அமைச்சர் சேகர் பாபு வீட்டில் தான்; இதற்கு இந்து வெறியர்தான் வேண்டும்” - ஹெச்.ராஜா

தற்போது தமிழகத்தில் நடப்பது கிரிமினல் ஆட்சி, இந்துக்களுக்கு எதிரான ஆட்சி, ஆகையால் உடனடியாக இதை அகற்ற வேண்டும். குறிப்பாக் திருடன் கையில் சாவியை கொடுத்தது போன்று, இந்துக்கள் கோயில்களில் உள்ள நகை, பணம், நிலம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். திமுக மு.க.ஸ்டாலின் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவர்களை அடித்து துரத்தவேண்டும், அதுவும் ஓட்டுக்கள் மூலம் நாம் செய்ய வேண்டும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டில் புல்டோசர் ஆட்சி அமையும். அப்போது அவர்கள் அனைவரும் தூக்கி எறியபடுவார்கள். மேலும் கடற்கரையில் எழுதாத பேனாவிற்கு சிலை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் குடி என்றால் என்ன என்று தெரியாமல் மக்கள் இருந்தார்கள். ஆனால்  கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் மதுபானம் கொண்டுவந்து அனைவரையும் குடிக்காரனாக ஆக்கிவிட்டார்கள், இது தான் திராவிட மாடம் ஆட்சி ஆகும்.

“அடுத்த ரெய்டு அமைச்சர் சேகர் பாபு வீட்டில் தான்; இதற்கு இந்து வெறியர்தான் வேண்டும்” - ஹெச்.ராஜா

திமுகவில் இலாக்கா இல்லாத அமைச்சர்கள் பலர் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் செந்தில் பாலாஜி இறந்து 50 நாட்கள் ஆகிவிட்டது என தகவல் வந்தது. அதை பார்த்து நான் பயந்துவிட்டேன். ஆனால் நேற்று காவல்துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜியை அழைத்து சென்ற காட்சியை பார்த்தபிறகுதான் அப்பாடா என்று உயிர் வந்தது. மேலும் தமிழ்நாட்டில் ஆளுநர் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஆளுநர் ஒருமுறை இந்த ஆட்சியை பற்றி ஒரு கடிதம் எழுதினால் திமுக ஆட்சி கலைந்துவிடும். மேலும் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடில் இந்துக்கள் ஒன்று இணைந்து ஆர்பாட்டம் நடத்தபடும். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கும், இந்துக்களுக்கும் விரோதமான அராஜக ஆட்சி நடக்கிறது. திராவிடமாடல் இயக்கத்தின் கடைசி சகாப்தம் இது தான்” எனத் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு

BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி

Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!

Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?

Tamilnadu RoundUp 24th Nov 2024: வலுவடைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை!

IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?

Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்

Embed widget