”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
Sengottaiyan : கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது, அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை என்று செங்கோட்டையன் பேசியுள்ளார்

கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை என்று செங்கோட்டையன் பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
விடுப்பட்ட செங்கோட்டையன் பெயர்:
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் இடம் பெறாததால் அதிமுகவினர் அதிர்ச்சயடைந்தனர். இந்த பட்டியலில் அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
இதையும் படிங்க: செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையன் பேட்டி:
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக திருச்சி வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது..
புது கேள்விகள் எல்லாம் கேட்டால் நான் எப்படி பதில் கூறுவது.அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன்.பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் பேசி இருப்பது குறித்து ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க வேண்டும்.
கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவர் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தால் நல்லது. நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார். அவர் தான் எல்லா பதிலும் கூறுகிறார்.நான் சாதாரண தொண்டன் என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுக-பாஜக கூட்டணி:
மேலும் பேசிய அவர் அதிமுக - பா.ஜ.க கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்.விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை அதில் கலந்து கொள்ளவில்லை என தான் ஏற்கனவே கூறினேன் என்றார் செங்கோட்டையன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

