Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை பிரபல பெண் இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகராக உலா வருபவர் விஜய்சேதுபதி. கதாநாயகன் மட்டுமின்றி வில்லன், சிறப்பு கதாபாத்திரம் என பல வேடங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மகாராஜா படத்திற்கு பிறகு இனிமேல் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
விஜய் சேதுபதி படத்தின் புதிய இயக்குனர்:
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அவரது படத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு அவர் இந்தப் படத்தை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2ம் பாகம் ரிலீசானது. தற்போது விஜய் சேதுபதி காந்தி டாக்ஸ், ஆஸ், ட்ரெயின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கிருத்திகா உதயநிதி:
கிருத்திகா உதயநிதி கடந்த 2013ம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்திற்குப் பிறகு அவர் காளி என்ற படத்தை இயக்கினார். பின்னர், பேப்பர் ராக்கெட் என்ற வெப்சீரிசை இயக்கினார். இந்த நிலையில், கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காதலிக்க நேரமில்லை.
ஜெயம் ரவி, வினய், நித்யாமேனன் ஆகியோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் இந்த படம் பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், விஜய் சேதுபதியை வைத்து அவர் சாதாரண கதைக்களத்தில் தன்னுடைய புதிய படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு எப்போது?
விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது 3 படங்கள் இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் பெரியளவு வெற்றியைப் பெறவில்லை. இந்த சூழலில், விஜய் சேதுபதி நடிப்பில் அவர் இயக்கும் படத்தின் மூலமாக மாபெரும் வெற்றியைத் தர கிருத்திகா ஆர்வத்துடன் உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

