Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vellore Pentland Multi-Super Specialty Hospital: வேலூர் ஜி.பி.எச் மருத்துவமனை வளாகத்தில், அரசு வேலூர் மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Vellore Government Multi-Super Specialty Hospital: தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு புதிய மருத்துவமனைகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜி.பி.எச் மருத்துவமனை
இன்றைய வேலூர் மாவட்டம் ஆங்கிலேயர் காலத்தில் வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அப்போது வேலூரில் 1919ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண, ஆளுநர் சர் வில்லியம் பாரோ பென்ட்லண்ட் பிரபுவால் ஜி.பி.எச் வட ஆற்காடு மாவட்ட மக்களுக்காக தொடங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த மருத்துவமனை ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் செயல்பட்டு வந்தது. கடந்த 2002ம் ஆண்டு வேலூர் அடுக்கம்பாறையில் அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதனால் வேலூர் ஜி.பி.எச் மருத்துவமனை தேவை குறைந்து மூடப்பட்டது.
தாலுகா மருத்துவமனை
மருத்துவமனை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மக்கள் இம்மருத்துவமனை தொடர்ந்து இயங்க வேண்டுமென கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தாலுகா அளவிலான மருத்துவமனையாக 100 படுக்கைகளுடன் தொடர்ந்து இயங்கி வந்தது. இதற்காக புறநோயாளிகள் பிரிவுக்கு தனி கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் அவசர சிகிச்சை பிரிவும் இயங்கி வந்தது.
புதிய பன்னோக்கு மருத்துவமனை
இந்நிலையில், ₹198 கோடி மதிப்பீட்டில் அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து வேலூர் ஜி.பி.எச் வளாகத்தில், புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நீ சாத்தியக்கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கூடுதலாக இடம் தேவைப்பட்டதை தொடர்ந்து, பிற பழைய கட்டிடங்களையும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி பயன்பாட்டுக்காக வருவது எப்போது?
மறுபடியும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய இடம் வசதி இல்லாததால், தற்போது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து, இந்த சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதியை ஏற்படுத்த மருத்துவக் கல்லூரியில் இயக்குனராகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய மருத்துவமனை அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடையும் தருவாயில், தற்போது உள்ளது. இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடைந்த பிறகு ஒரு சில வாரங்களில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features Of Vellore Multi Super Specialty Hospital
வேலூர் மாநகரத்தில் மத்தியில் அமையவுள்ள பன்னோக்கு மருத்துவமனைக்கான புறநோயாளிகள் பிரிவும் ஜி.பி.எச் வளாகத்தில் அமைகிறது. அப்பிரிவு தற்போது மருத்துவப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள தாலுகா அளவிலான ஜிபிஎச் மருத்துவமனையில் இயங்கும்.
இதனால் இவ்வளாகம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பின்னர் பன்னோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இங்கு செயல்படும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

