Lesbian பற்றி படம் பண்ணிர்யிருக்கேன்...மம்மூட்டியை பாராட்டியதால் கடுப்பான மோகன்லால்
நடிகர் மம்மூட்டியின் காதல் தி கோர் படத்திற்கு 30 ஆண்டுகள் முன்பாகவே தான் லெஸ்பியன் உறவுபற்றிய படத்தில் நடித்திருப்பதாக மோகன்லால் தெரிவித்துள்ளார்

எம்புரான்
மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் மோகன்லால். தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் , ஜில்லா , உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் வழி இவருக்கும் பெரியளவில் தமிழ் ரசிகர்களூம் இருந்து வருகிறார்கள். தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிஃபர் 2 எம்புரான் படத்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள லூசிஃபர் 2 வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகர் மம்மூட்டியைப் பற்றிய கேள்விக்கு மோகன்லால் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்மூட்டி பற்றி மோகன்லால்
மலையாள திரையுலகில் மோகன்லால் மம்மூட்டி ஆகிய இருவரும் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்கள். இருவரது ரசிகர்களுக்கு இடையில் அவ்வபோது சில மோதல்கள் இருந்து வந்தாலும் இரு நடிகரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதையையே வெளிப்படுத்தி வருகிறார்கள். மோகன்லால் சமீபத்தில் நடித்த மலைக்கோட்டை வாலிபன், பரோஸ் ஆகிய படங்கள் பெரியளவில் கவனம் பெறவில்லை. அதே நேரம் மம்மூட்டி நடித்த காதல் தி கோர் , பிரமயுகம் , டர்போ ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன. மம்மூட்டி மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடிப்பது அவருக்கு இளம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை கொடுத்துள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மோகன்லாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
" மம்மூட்டி நடித்த எல்லாமே அற்புதமான படங்கள். அந்த மாதிரி படங்கள் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மாதிரியான கதைகளை அவர் தாங்கி நடிப்பதை விரும்புகிறார். மம்மூட்டி நடித்த காதல் தி கோர் படம் பார்த்தேன். இதே மாதிரியான படத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் செய்திருக்கிறோம்.தேசாத்னாகிளி கரையாரில்லா என்கிற படத்தில் லெஸ்பியன் உறவைப் பற்றி பேசியிருக்கிறோம்" என மோகன்லால் தெரிவித்துள்ளார்
புதுவிதமான கதைகளை மம்மூட்டி தேர்வு செய்வதை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் மோகன்லால் அதே போல் நிறைய புது முயற்சிகளை செய்து வருகிறார். மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் படம் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தபோதிலும் அந்த படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

